Friday, July 22, 2011

தேங்காய் பொடி

இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.

1 Cup தேங்காய் துருவல்
1 Tea spoon உளுத்தம் பருப்பு
1 Tea spoon கடலை பருப்பு
10 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.

1 comment:

prabhadamu said...

டாஷ்போர்டு = அடிப்படைகள்

எங்கள் வலைப்பதிவு பட்டியலில் உங்கள் வலைப்பதிவை சேர்க்க வேண்டுமா? yes


தேடு பொறிகள் உங்கள் வலைப்பதிவைத் தேடட்டுமா? yrs



உங்கள் வலைப்பதிவில் விரைவுத்திருத்தத்தைக் காண்பிக்க வேண்டுமா? no


மின்னஞ்சல் இடுகை இணைப்புகளை காண்பிக்க வேண்டுமா? yes


******

அமைப்புகளை சேமி

Blog Archive