Monday, September 26, 2011

கடலை பருப்பு இனிப்பு சுண்டல்

வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு புன்னகை

தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
சக்கரை 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
நன்கு கிளறவும்.
சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார் புன்னகை

காராமணி இனிப்பு சுண்டல்

வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு புன்னகை

தேவையானவை:

காராமணி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
கரைந்ததும் வடிகாட்டவும்.
மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
நன்கு கிளறவும்.
வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார் புன்னகை

மெரினா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இந்த மெரினா சுண்டல் எங்க வீட்டில் ஹிட். எங்க பாட்டி எப்பவும் நவராத்திரி
ஞாயிறு கண்டிப்பாக செய்வார்கள். ஆனால் இது சாமிகளுக்கு இல்ல ஆசாமிகளுக்கு புன்னகை

தேவையானவை:

பட்டாணி 2 கப்
புளிப்பு மாங்காய் 1 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கினது 1/2 கப்
வெங்காயம் 2 பெரியது (பொடியாக நறுக்கவும்)1
இஞ்சி 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் 3 -4 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய் பொடி 1 ஸ்பூன்

தாளிக்க:
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி, துருவின இஞ்சி , பச்சை மிளகாய் போடவும்.
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மாங்காய் , தேங்காய் போடவும்.
மிளகாய் பொடி தூவி கிளறவும்.
ஒரு 2 நிமிடம் கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், 'மெரினா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்' ரெடி புன்னகை
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: தேவையானால், எலுமிச்சை கூட பிழியலாம் புன்னகை

மசாலா சுண்டல்

பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.

தேவையானவை:

மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்

மசாலா அரைக்க :
கடலை பருப்பு 6 ஸ்பூன்
உளுந்து 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6 -8
தனியா 4 ஸ்பூன்
எண்ணை 1 ஸ்பூன்

தாளிக்க:
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைக்க கொடுத்தவைகளை போட்டு வறுக்கவும்.
அறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மசாலா பொடி தூவி கிளறவும்.
ஒரு 2 நிமிடம் கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் செய்வதானால், களைந்து அப்படியே குக்கரில் வைக்கலாம் புன்னகை

மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல்

பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.

தேவையானவை:

மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மிளகாய் பொடி தூவி கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் செய்வதானால், களைந்து அப்படியே குக்கரில் வைக்கலாம் புன்னகை

தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் 2

இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு,பயத்தம் பருப்பு ,பச்சை பயறு , வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.

தேவையானவை:

மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் வற்றல் 2 -3
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த பருப்பை கோட்டவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

குறிப்பு: இதற்க்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி இலேயே செயலாம். தலித்ததும், கலைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். 'நருக்குனு' வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான் புன்னகை

தேங்காய் பருப்பு போட்டு சுண்டல்

இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.

தேவையானவை:

மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன தனியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த பட்டாணி, போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

நவராத்திரி சுண்டல்கள்

முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.

கொத்துக்கடலை,
பச்சை பயிறு,
வேர்கடலை,
பட்டாணி,
காராமணி,
மொச்சை,
ராஜ்மா,
கொள்ளு,
பயத்தம் பருப்பு,
கடலை பருப்பு
என சுண்டல்கள் செயலாம்.

நவராத்திரி சுண்டல்கள்

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் புன்னகை இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் புன்னகை உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன புன்னகை

Blog Archive