Wednesday, July 20, 2011

பிரட் சாண்ட்விச்

தேவயானவை:

பிரட், ஏதாவது "left over curry" இல்லாவிடில்
வெங்காயம், தக்காளி , உருளை கிழங்கு , சீரகம் கடுகு, கொஞ்சம் எண்ணை, பிரட் டொஸ்டர்.

செய்முறை:

உருளை யை வேகவைக்கவும்.
( குக்கர் இல் தண்ணீர் விட்டோ அல்லது ஓவன் லோ வைக்கவும், வெந்ததும் தோல் உரித்து மசிக்கவும் )
வாணலி இல் எண்ணைவிட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி போடவும்.
வதக்கவும்.
வெந்த உருளைக்கிழங்கை போடவும்.
தண்ணீர் விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
காய் ரெடி.
இப்ப இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் காய் வைத்து அதன் மேல் துளி நெய் தடவி, டொஸ்டர் இல் வைக்கவும்.
காஸ் இன் மே தீ இல் இருபுறமும் சுடவும்.
திறந்தால் டோஸ்ட் ரெடி.

ஏற்க்கனவே ஏதாவது curry இருந்தால் அதை பிரட் நடுவில் வைத்து மேலே சொன்னது போல் செய்யவும். டொமாட்டோ சாஸ் சுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: எலக்ட்ரிக்கல் டொஸ்டர் இருந்தால் இன்னும் சுலபம் :)

பிரெட் வித் கறிகாய்

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
1 கப் mixed vegetables (அதாவது, கேரட் , வெங்காயம், பட்டாணி,தக்காளி,உருளை என் உங்களுக்கு பிடித்தமான காய்களை நறுக்கி கொள்ளவும்.)
3 ஸ்பூன் நெய்
1/2 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் கடுகு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் . (கத்தரிக்கோலால் சதுரமாக வெட்டவும். சமயல் அறைக்கென தனி யாக ஒன்று வைத்துக்கொள்ளவும். கண் எரியாமல் பொடியாக பச்சை மிளகாய் வெட்டலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> )
வாணலி இல் நெய் 1 ஸ்பூன் விட்டு பிரட் துண்டங்களை நல்ல பொன்னிறமாக சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மறுபடி வாணலி யை அடுப்பில் வைத்து நெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை போடவும்.
நான்கு வதக்கவும். துளி தண்ணி தெளித்து மூடவும்.
2 நிமிடத்த்தில் வெந்துவிடும். பிறகு நன்கு கிளறி வறுத்து வைத்துவைதுள்ள பிரட் துண்டங்களை போடவும்.
கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவயான bread mixed veg. தயார் .
நல்ல 'filling' ஆக இருக்கும்.
சுலபமாக தயாரிக்கலாம்.

சக்கரை தூவின பிரட்

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல 'மெத்' என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

பிரட் உப்புமா

தேவயானவை:
6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:
பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> அப்படியே சாப்பிடலாம்.

All Purpose Powder

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூடு, அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கதிதரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

நாரத்தை குழம்பு

தேவையானவை:

நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
வெல்லம் - 1 சின்ன கட்டி
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்க வும் .
அதில் வெந்த பருப்பு, நார்தம் காய்ன் சாறு சேர்க்கவும்.
வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
saadhathil போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .

பருப்பு உருண்டை மோர் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - 1 கப்
தேங்காய் துருவ்ல் - 1/2 கப்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
தேங்காய் , பச்சைமிளகாய் கடலை பருப்பை ஒரு 10 நிமிஷம் ஊறவைத்து அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிலுப்பிய தயிர் சேர்க்கவும்.
அதில் உப்பு சேர்க்கவும்.
அரைத்த விழுத்தையும் போடவும். கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை சேர்க்கவும்.
அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.

குறிப்பு: உருண்டைகளை தனியாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.

மலபார் சாம்பார்

அரைக்க தேவயானவை :
5 -7
குண்டு மிளகாய் வற்றல்
2
ஸ்பூன் கடலை பருப்பு
1
ஸ்பூன் தனியா
1/2
கப் துருவின தேங்காய்
1
ஸ்பூன் வெந்தயம்
மற்ற தேவயான பொருட்கள்:
கடுகு
கறிவேப்பிலை
2 -3
ஸ்பூன் தேங்காய் எண்ணை
2
ஸ்பூன் புளி paste
1/2
ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1
கப் வெந்த துவரம் பருப்பு
பெங்களூர் கத்தரிக்காய் , கத்தரிக்காய்
அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".


செய்முறை :

தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்து, தேங்காயுடன் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
2
டம்ப்லர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, அரைத்தவிழுது , உப்பு என் எல்லாம் போடவும்.
காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.

கீரை குழம்பு

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 கட்டு கீரை (முளைக்கிரை அல்லது பருப்பு கீரை )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.

செய்முறை:
கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய கீரை போட்டு வதக்கவும்.
இப்போது,
வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம்
,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
"கீரை குழம்பு " ரெடி , சாதத்துடன் பரிமாறலாம்.
சாதத்துடன் பரிமாறவும்.

இஞ்சி குழம்பு

தேவையானவை:

3 ஸ்பூன் புளி பேஸ்ட்
2 ஸ்பூன் துவரம் பருப்பு
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
2 -3 பெரிய வெங்காயம்
25 - 30 பல் பூண்டு
4-6 இன்ச் இஞ்சி துண்டு
1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
கடுகு

மஞ்சள் பொடி
பெருங்காயம் (தேவயானால் )
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
2 ஸ்பூன் பொடித்த வெல்லம்

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.
வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
2 டம்பளர் தண்ணீர்
விடவும்.
புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
எல்லாம் சேர்க்கவும் .
நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
பிறகு
இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்.

குறிப்பு: இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து
சாப்பித்லாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.
(புளிக்காய்ச்சல் போல் )


வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்

எண்ணை கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை :

250 gms குட்டி கத்தரிக்காய்
2 -3 ஸ்பூன் புளி பேஸ்ட்
3 - 4 ஸ்பூன் APP (ALL PURPOSE POWDER)
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் மஞ்சள் பொடி
2 சிட்டிகை பெருங்காயப்பொடி
1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 ஸ்பூன் கடுகு
உப்பு
கத்தரிக்காய் வதக்க நல்லெண்ணை

செய்முறை:
முதலில் குட்டி கத்தரிக்காய் களை அலம்பி காம்பை மட்டும் நறுக்கவும்.
பிறகு, அதை 4 ஆக பிளக்கவும்.
பிளந்த தில் APP யை வைது அடைக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
கத்தரிக்காய்களை மெதுவே போடவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பொருங்காயப்பொடி , வெந்தயப்பொடி போட்டு மெல்ல வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் போடவும்.
தேவயானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
காய் நான்கு வெந்து எண்ணை பிரிய துவங்கியதும் அடுப்பை அணைக்கவும்
சூடு சாத்ததுடன் பரிமாறவும்.
சப்பாத்தி உடனும் நன்றாக இருக்கும்.

கத்தரிக்காய் வற்றல்

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை. ( எங்க மாமனார் cum தாத்தா இந்த combination நை ரொம்ப விரும்பினார். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> )

"வற்றல்" குழம்பில் வற்றல் போடும் முறை

கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?

அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.

குறிப்பு: மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.

அரைத்துவிட்ட சாம்பார்

அரைத்துவிட்ட சாம்பார் - இதை இட்லி சாம்பார் ஆகவும் பயன் படுத்தலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
உருளை கிழங்கு பொடிமாஸ் , அல்லது எந்த வதக்கின கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் முருங்கைக்காய் , முருங்கைக்காய் + சின்ன வெங்காயம், வெறும் பெரிய வெங்காயம், முருங்கைக்காய் + பெரிய வெங்காயம் என் தான் களை மாற்றி குழம்பு செய்யலாம்

மிளகு குழம்பு

மிளகு குழம்பு - உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.

தேவையானவை:

10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
'பருப்பு துவைய' லுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)

இப்ப தயிர் சாதம் .
இதுக்கு நன்றாக மசித்த சாதத்தில், கெட்டியான எருமை தயிர் விட்டு, உப்பு போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் Try பண்ணி பாருங்கள்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)

இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே. புன்னகை

சுடு சாதத்தில் 'பிரெஷ் ' ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. சோகம் முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.

குழம்பு வடாம்

தேவையானவை:

பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்

செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.

குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.

வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?

வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?

பூண்டு, முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் போடலாம்.

கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம்.

குழம்பு வடாம் போட்டும் "வற்றல்" குழம்பு வைக்கலாம்.

வத்த குழம்பு

வத்த குழம்பு, குடமிளகாய் சாம்பாருக்கு சொத்து எழுதி வைக்காதவர்கள் இதற்கு எழுதி வைக்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவையானவை :

1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
2sp புளி பேஸ்ட்
1 /2sp துவரம் பருப்பு
1 /2sp கடலை பருப்பு
4 - 5 குண்டு மிளகாய் வற்றல்
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை துவி இறக்கவும்.
(எண்ணெய் பிரிந்து வரணும் )
சாதத்துடன் பரிமாறவும்.
சுட்ட அப்பளம் நல்லா இருக்கும்.
எல்லா வறுத்த (fried ) காய் களும் நன்றாக இருக்கும்.

குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.

பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

கீழ் கண்ட காய்கறி லிஸ்ட் லிருந்து எதாவது ஒன்றை போடலாம்.
அவை: குடமிளகாய் (இந்த சாம்பாருக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் அவ்வளோ taste புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> ) முள்ளங்கி, நூல்கோல் , கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், உருளை, காரட் , சௌ சௌ.

இதில் , வெங்காயம், சின்னவெங்காயம், குடமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை தாளித்ததும் போட்டு வதக்கணும்.

முள்ளங்கி, நூல்கோல் ,முருங்கைக்காய், காரட் , சௌ சௌ ஆகியவற்றை பருப்புடன் வேகவைத்து போடணும்.

உருளை யை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.

தனக்கு என் வாசம் இல்லாத காரட் , சௌ சௌ , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து போடலாம்.

பருப்பு சாம்பார்

சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.

Here we go........

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி


எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும். ஜாலி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி" longdesc="17">


குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.

புளி பேஸ்ட்

குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்

இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )

குழம்பு பொடி

முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி வடாம் - கூழ் வத்தலுக்கு சமமான அந்தஸ்த்துடய வத்தல் . எங்கள் வீடுகளில் இதற்க்கும் பெரும் வரவேற்ப்புண்டு. போடுவது ரொம்ப ஈஸி. நல்ல சூப்பராக பொரியும். குழந்தை கள் பெரிதும் விரும்புவர்கள் . இதிலும் பல வகை உண்டு. அவற்றை இங்கு பார்போம்.

தேவையானவை :

1 கிலோ ஜவ்வரிசி
150 -200 கிராம் பச்சை மிளகாய்
1/2 பெருங்காய பொடி
உப்பு

செய்முறை :

முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு 2 -3 முறை களைந்து அது மூழ்கும் வரை திண்ணிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
காலை இல் அடி கனமான உருளி இல் இதை போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாயை அலம்பி நன்கு அரைக்கவும்.
ஜவ்வரிசி வேக ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகை விழுது உப்பு மற்றும் பெருங்காய பொடி போட்டு கலக்கவும்.
எல்லமாக சேந்து நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும், பிளாஸ்டிக் ஷீட் இல் கரண்டியால் மொண்டு மொண்டு வத்தல் இடவும்.
நேரம் ஆக ஆக வத்தல் மாவு கெட்டியாகும்.
எனவே வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொண்டு மொத்த மாவையும் வாடாமாக இடவும்.
மதியம் அல்லது சாயந்திரம் வத்தல்களை பிச்சு திருப்பி போடணும்.
இருபுறமும் நன்கு காய்ந்ததும் ( கையால் உடைக்க வரணும் ) டப்பாக்களில் சேமிக்கவும்.
சரியாக செய்தால் வத்தல் பொறிக்கும் பொழுது 2 - 3 மடங்காக வெள்ளையாய் பொரியும்.

அவல் வத்தல்

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
3/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா ஓமம் அல்லது சீரகம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

அவல் வத்தல் 2

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

தக்காளி வத்தல்

தக்காளி வத்தல்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 /2 கப் தக்காளி puree
2 ஸ்பூன் மிளகாய் பொடி

செய்முறை:

வத்தல் மாவில் தக்காளி puree மற்றும் மிளகாய் பொடியை போட்டு கலக்கவும்.
இதை கலந்ததும் மாவு கொஞ்சம் நீர்க்க ஆகும்.
எனவே பிளாஸ்டிக் ஷீட் இல் மாவை கரண்டியால் எடுத்து அப்பளம் போல் வட்டமாக ஊற்ற வேண்டும்.
காயந்ததும் டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
கலர் ஆக இருப்பதால் குழந்தை களுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: தக்காளி puree ai கடை இல் வாங்கினாலும் சரி இல்லாவிடில் வீட்டில் தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டி சேர்க்கணும்.

காரம் குறைவாக வேண்டுபவர்கள் மாவில் பச்சை மிளகாயை தவிர்க்கவும்.

இதற்க்கு நாட்டு தக்காளி நன்றாக இராது பங்களூர் தக்காளி நன்றாக இருக்கும்.

பூசணி வத்தல்

பூசணி வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )


செய்முறை:

வத்தல் மாவில் பொடியாக நறுக்கிய பூசணிக்காயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

கொத்துமல்லி வத்தல்

கொத்துமல்லி வத்தல் இதுவும் புதினாவை போன்றதுதான் , புதினா தழைகளுக்கு பதில் கொத்துமல்லி தழைகளை போடணும்.

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த கொத்துமல்லி
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு பிழியனும் என் நினத்தால் , கொத்துமல்லி யை நறுக்காமல் மசிய அரைத்து ( தண்ணீர் விடாமல் ) கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.

புதினா வத்தல்

புதினா வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த புதினா
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )

செய்முறை:
வத்தல் மாவில் புதினா மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு
பிழியனும் என் நினத்தால் , புதினா இலைகளை நறுக்காமல் மசிய அரைத்து (
தண்ணீர் விடாமல் )மாவில் கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.

பாகற் காய் வற்றல்

பாகற் காய் வற்றல். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தேவயானவை:

1/2 கிலோ பாகற் காய்
2 டேபிள் ஸ்பூன் உப்பு

செய்முறை:
பாகற் காய்யை அலம்பி வட்ட வட்ட மாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதிக்கும் போது நறுக்கி வைத்துள்ள பாகற் காயை போடவும் .
உப்பு போடவும்.
மீண்டும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காய் வெந்து விட்டதா என் பார்க்கவும்.
(கரண்டியால் "கட்" செய்தால் கட் பண்ண வரணும் )
வெந்து விட்டால் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும் , தண்ணீரை வடிகட்டி விட்டு , காய்களை பிளாஸ்டிக் ஷீட் இல் உலர்த்தவும்.
நன்கு " சல சல " வென காய்ந்ததும் டப்பாகளில் சேமிக்கவும்.
தேவயான போது எண்ணை இல் பொரிக்கவும்.
கலந்த சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ளலாம் , வெறும் சுடு சாதத்திலும் போட்டு நொறுக்கி பிசந்து சாப்பிடலாம். ( இது தான் சுகர் நோயாளிகளுக்கு பொருந்தும் )

வெங்காய வத்தல்

வெங்காய வத்தல் - இது பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த வெங்காயம்
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

கூழ் வத்தல்

கூழ் வத்தல் - இது தான் ரொம்ப பிரசித்தம் எங்கள் வீடுகளில் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> இதை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையானவை:

1கிலோ புது பச்சரிசி (களைந்து உலர்த்தி மாவு அரைக்கவும்)
200 கிராம் ஜவ்வரிசி
15 - 20 பச்சை மிளகாய்
2 -3 எலும்ச்சை (சாறு பிழியவும் )
1/2 ஸ்பூன் பொருங்காய பொடி
உப்பு

செய்முறை:

ஒரு அடிகனமான உருளி அல்லது 10 லிட்டர் குக்கர் ஐ எடுத்துக்கொண்டு அதில் பதி அளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
இப்போது ஜவ்வரிசி யை போடவும்.
நன்கு கிளறவும். அது கொதிக்கட்டும்
மிக்சி இல் பச்சைமிளகைகளை போட்டு நீர் விட்டு அரைக்கவும்
வடிகட்டவும். அதை கொதிக்கும் ஜவ்வரிசி இல் போடவும்.
உப்பு பொருங்காய பொடி போடவும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும்., அடுப்பை சின்ன தாக்கவும் .
அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறவும்.
கட்டி தட்டாமல் கிளறவேண்டும்.
மாவு நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு மறுபடி யும் நன்கு கிளறவும்.
நன்கு ஆறினதும், பிளாஸ்டிக் சீட் இல் வத்தல் பிழியயும்.
நன்கு காய்ந்ததும் டப்பாக்களில் போட்டு முடி வைக்கவும்
வருஷத்துக்கு கேடாது. தேவயான போது பொரித்து கொள்ளலாம் .


குறிப்பு: களைந்து உலர்த்த்ன மாவு இல்லாமல் கடை இல் விர்க்கும் மாவை யும் உபயோகிக்கலாம் ஆனால் வத்தல் கொஞ்சம் "கடக் கடக்" என வரும்.

சூட்டுடன் வத்தல் பிழிந்தால், வத்தல் சிவக்கும். வெள்ளை வெளேர் என் வராது. வேண்டுமானால் முதல் நாள் இரவே கிளறி வைத்துவிட்டு மறுநாள் விடிகாலை பிழியலாம். அப்படி பிழிவ்தால் எலுமிச்சை பிழிய வேண்டிய அவசியம் இல்ல மற்றும் வெயீலுக்கு முன்னே பிழிந்துவிடலாம்.

முறுக்கு அச்சில் "ரிப்பன் " அல்லது தேன்குழல் அல்லது ஓமப்பொடி தட்டு போட்டு பிழியலாம் அவர் அவர் விருப்பம் அது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

அரைத்த பச்சை மிளகாயை வடி கட்டலை என்றால் அது ஓமப்பொடி கண்ணில் அடைத்துக்கொண்டு சரியாக பிழிய வராது

Blog Archive