Saturday, September 10, 2011

பரங்கிக்காய் புளிக் குழம்பு

தேவையானவை :

பரங்கிக்காய் – 2 பத்தை
சின்ன வெங்காயம் – 10 (உரித்தது)
பூண்டு – 4 பல்
தக்காளி – 1
புளி – எலுமிச்சையளவு அல்லது புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
குழம்பு மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன் (வறுத்து அரைத்தது )

தாளிக்க:

கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம், எல்லாம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணை கொஞ்சம்

செய்முறை:

பரங்கிக்காயை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டைஉரித்து தட்டி வைக்கவும்.
தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துண்டங்களை போட்டு வதக்கி, அதில் குழம்பு பொடி போட்டு புளிக் கரைத்ததையும் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
பரங்கிக்காய் நல்லா வெந்து பச்சை வாசனை போனவுடன், வெந்தயப்பொடி போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.

ஓலன்

தேவையானவை:

பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு

செய்முறை:

தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.

எரிசேரி

இதுவும் எங்க வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணுவதுபுன்னகை

தேவையானவை:

வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )

அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை:

சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும்.
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும்.
வெந்த காயுடன் கோட்டவும்.
வேண்டுமானால் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான 'எரிசேரி' தயார்.
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும் புன்னகை

மிளகாய் அவியல்

கறிகாய் இல்லாமல் செய்யும் அவியல் இது புன்னகை

தேவையானவை:

துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

அவியல்

அவியல் - இது எங்க வீட்டில் 'ஹிட்' புளியோதரை , அடை இவற்றுக்கு ரொம்ப நல்ல சைட் டிஷ். சடத்தில் போட்டும் சாப்பிடலாம். புன்னகை

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
தயிர் – 1/4 டம்ளர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'அவியல்' ரெடி

பால் பாயசம்

தேவையானவை :

அ‌ரி‌சி - 1 க‌‌ப்
பா‌ல் - 4 க‌ப்
ச‌ர்‌க்கரை - 2 க‌ப்
மு‌ந்‌தி‌ரி - 12
ஏல‌க்கா‌ய் பொடி - 1 தே‌க்கர‌ண்டி
நெ‌ய் - 2 மேஜை‌‌க் கர‌ண்டி

செய்முறை:

ஒரு வா‌ண‌லி‌யி‌ல் நெ‌ய் ‌வி‌ட்டு, அ‌‌தி‌ல் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
‌பிறகு வாணலி இல் ஒரு க‌ப் அ‌ரி‌சி‌க்கு, ஒரு க‌ப் பா‌ல், ஒரு க‌ப் த‌ண்‌ணீ‌ர் எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.
பால் ,த‌ண்‌ணீ‌ர் கலவை‌யி‌ல் அ‌ரி‌சி ந‌ன்கு வெ‌ந்து குழைய வே‌ண்டு‌ம்.
அடிக்கடி கிளறிவிடவும்.
அ‌ரி‌சி நன்கு வெந்ததும், ‌மீத‌மிரு‌க்கு‌ம் பாலை ஊ‌ற்‌றி அடி‌பிடி‌க்காம‌ல் ‌கிளற வே‌ண்டு‌ம்.
பா‌ல் சு‌ண்டி வரு‌ம்போது ‌தீயை ‌‌மிதமாக வை‌த்து‌வி‌ட்டு ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்கவு‌ம். ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏல‌‌க்கா‌ய் பொடி, நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பா‌ல் பாயச‌ம் தயா‌ர்.

அடை பிரதமன்

எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் புன்னகை செப்.9 -2011 ஓணம் வருகிறது புன்னகை அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் அன்பு மலர்


அடை பிரதமன் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். நாம் செய்யும் 'பால் கொழுக்கட்டை' போன்றது. கொஞ்சம் செய்முறை வேறு புன்னகை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானவை :

அரிசி 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்

செய்முறை:

அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி , இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பின், நன்கு ஆற விடவும்.
வெந்த மாவை இலை லிருந்து உரித்து எடுத்து ,மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலி இல் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடி செய்து போடவும்.
நன்கு வெந்த தும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
அடைபிரதமன் தயார்.

ரவா கிச்சடி

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வெந்ததும் இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும் புன்னகை

Ready Made புளியோதரை

Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

இப்ப புளியோதரை செய்யலாம்.

அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி

செய்முறை:

ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
சுவையான புளியோதரை ரெடி.

குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்
புளியோதரை ரெடி பண்ணிடலாம்.
lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.

புளிக்கூட்டு செய்யும் முறை

கூட்டுக்கு பருப்பு கறிகாய் வெந்ததும், வாணலில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு கறிகாய் போட்டு , இரண்டு ஸ்பூன் புளி பேஸ்ட் போட்டு, பெருங்காயம் , கறிவேப்பிலை, வறுத்து அரைத்த வெந்தய பொடி, உப்பு , தேங்கா துருவல்,அரைத்துவைத்துள்ள மசாலா எல்லாம் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிடலாம். ரொம்ப சுலபம்.

வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய

பருப்பு சாம்பார் செய்ய, வெந்த பருப்புடன் புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும் . காய்கள் தாளித்ததும், இதை கொட்டி, சாம்பார் பொடி ,வெந்தயபொடி, பெருங்காயப்பொடி என எல்லாம் போட்டு கொதித்ததும் இறக்கவும்.


பருப்புசாம்பார் போலவே, ரசம் இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.

ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புன்னகை புளி யும் 'திட்டமாக ' உபயோகிக்கலாம்.


வத்தல் குழம்புக்கும் இதே போல் தான் :)

புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
No problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூறியவைகளின் செய்முறையை பார்போம்.

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.

குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும் புன்னகை

கறிவேப்பிலை குழம்பு 2

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 1 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாவற்றையும் தேங்காயுடன் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும் ( வேண்டுமானால் தண்ணீர் விடவும்).
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.

குறிப்பு: தேங்காய் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.
வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

கறிவேப்பிலை குழம்பு 3

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 2 கப்
மிளகாய் வற்றல் 12 - 14
மிளகு 2 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , 'கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .

கத்தரிக்காய் வற்றல்

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை.

சாம்பாரில் போடும் வெங்காய வடாம்

செட்டி நாட்டு வெங்காய வடகம்

தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்

செய்முறை :

வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.

Blog Archive