Monday, December 12, 2011

புழுங்கல் அரிசி கஞ்சி

புழுங்கல் அரிசி கஞ்சி: இது ரொம்ப சத்தானது. நாங்க 4 -5 மாதத்திலேயே ஆரம்பிச்சுடுவோம்.

தேவையானவை:

1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
ஒரு பிடி பார்லி
1 ஸ்பூன் சீரகம்.

செய்முறை :

அரிசியை வரட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும் .
நல்லா பொரியனும், ஆனால் கருக கூடாது.
அரிசி நல்லா பொரியும் பொது, பார்லி போட்டு வறுக்கணும்.
அடுப்பை அணைத்துவிட்டு சீரகம் போடணும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆறினதும் மிக்ஸில மாவாக அரைக்கவும்.
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

கஞ்சி செய்யும் போது 1 ஸ்பூன் பொடி எடுத்து ( எதுவுமே முதலில் நீங்க சாப்பிட்டு பார்த்து பின் குழந்தைக்கு தரவும்) 1 டம்பளர் தண்ணீரில் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும், அடிபிடிக்காமல் கிளறவும்.
வேண்டுமானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
தண்ணியாக போட்டு வடிகட்டி பால் கலந்து, சர்க்கரை போட்டு பாட்டிலில் தரவும்.
அப்படியெவும் தரலாம்.
அதாவது பால் இல்லாமலும், தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிக படுத்தலாம்.

7 - 8 மாத குழந்தைக்கு கூழ் போல செய்து ,(முழுங்க முடிந்தால்) 'semi solid' ஆக செய்து ஸ்பூன் இல் தரலாம். .

அதே போல் இதில் துளி உப்பு போட்டு மோர் விட்டும் தரலாம். ரொம்ப சத்தான கஞ்சி இது, நாம் கூட குடிக்கலாம். ஜுரம் போது, இரவு சாப்பிட பிடிக்காமல் இருக்கும் போது இந்த கஞ்சி குடிக்கலாம்

குறிப்பு: பார்லி இருப்பதால் 'ஒன்றுக்கு' நல்லா போகும், புழுங்கல் அரிசி என்பதாலும் சீரகம் இருப்பதாலும் நல்லா ஜெரிச்சுடும்

குழந்தைகளுக்கு உணவுகள்

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில் semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை 1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.

பாலக் பனீர்

இந்த 'பாலக் பன்னீரை' விரும்பாதவர்களே கிடையாது எனலாம் புன்னகை

தேவையானவை :

பாலக் 2 கட்டு
பனீர் 500 கிராம்
எண்ணை 1/4 கப்
தயிர் 1/4 கப்
தனியாப்பொடி 1 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
பட்டை பொடி 1/2 ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
கிராம்பு பொடி 1/2 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
ஃபிரெஷ் கிரீம் அல்லது துருவிய பனீர் 1 ஸ்பூன் ( அலங்கரிக்க )

அரைக்க வேண்டிய பொருட்கள் :

பெரிய வெங்காயம் 2
பூண்டு 10 -12 பல்
இஞ்சி 1 துண்டு
கொத்துமல்லி தழை 1 கைப்பிடி அளவு
புதினா 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் 7 -8
நன்கு விழுதாக அரைக்கவும்

செய்முறை:

முதலில் பாலக்கை, அலம்பி வேகவைத்துக்கொள்ளவும்.
மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும் .
தனியே வைக்கவும் .
வாணலி இல் எண்ணை விட்டு அரைத்த மசாலா விழுதை முதலில் போட்டு வதக்கவும்.
பனீர் ஐ துண்டுகளாக்கவும் .
எண்ணை பிரிந்து வரும்போது, பனீர் துண்டுகளை போடவும்.
வதக்கவும்.
தனியாப்பொடி , சீரகப்பொடி, பட்டை பொடி ,ஏலப்பொடி ,கிராம்பு பொடி ,உலர்ந்த வெந்தய இலைகள் எல்லாம் போடவும்.
நன்கு கலக்கவும், இப்ப தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை போடவும்.
உப்பு போடவும்.
கொதிக்கவிடவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
ஒரு 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
அருமையான 'பாலக் பனீர் ' தயார்.
ஒரு serving dish இல் எடுத்து வைக்கவும்.
துருவிய பனீர் அல்லது கிரீம் கொண்டு அலங்கரிக்கவும் .
சப்பாத்தி , நான், பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் முதலில் பனீர் துண்டுகளை எண்ணை இல் வறுத்து எடுக்கலாம்.

பனீர் சப்பாத்தி

இது எங்க வீட்டில் செம ஹிட் புன்னகை செய்வதும் சுலபம் .

தேவையானவை:

பனீர் - 200 கிராம் (நன்கு துருவிக்கொள்ளவும் )
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
உப்பு
சப்பாத்தி செய்ய தேவையான மாவு
எண்ணை கொஞ்சம்

செய்முறை:

வாணலி இல் துருவின பனிரை போடவும்.
மிளகு சீரகத்தை பொடித்து போடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும்.
நல்ல ஒரு பந்து போல சுருண்டு வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.
இது தான் 'stuffing material' அதாவது இதைத்தான் நாம் சப்பாத்தி உள்ளே வைக்கணும். புன்னகை
இதை ஒரு தட்டில் அல்லது பேசனில் வைத்துக்கொள்ளவும்; கொஞ்சம் ஆறட்டும்.
சாதாரணமாய் எப்படி சப்பாத்திக்கு மாவு கலப்பீர்களோ அப்படி கலந்து வைக்கவும்.
ஒரு 1/2 மணி கழித்து, சப்பாத்தி மாவில் கொஞ்சம் எடுத்து உருட்டி , சப்பாத்தி இடவும்.
அதன் நடுவில் செய்து வைத்துள்ள பனீர் கலவையை 1 ஸ்பூன் வைக்கவும்.
நன்கு மூடி, சப்பாத்தி யை மெல்ல இடவும்.
கல்லில் போட்டு இரு புறமும் எண்ணை விட்டு எடுக்கவும்.
அருமையான 'பனீர் சப்பாத்தி ' தயார்.

பனீரில் பலவகை உணவுகள்


பன்னீர் செய்வது எப்படி ?

பாலாடைக்கட்டி என்பது 'பனீர் ' என்று சொல்ல படுகிறது பால்லை காய்ச்சிய பின் அதன் மேல் படிவது 'பால் எடு' அது பாலாடைக்கட்டி இல்லை .

பாலில் துளி எலுமிச்சை சாறு விடவேண்டும், அப்ப பால் திரிந்து விடும், அதை ஒரு மெல்லிய மஸ்லின் துணி இல் விட்டு வடிகட்ட வேண்டும். நன்கு அழுத்தி, எல்லா நீரையும் வெளியேற்ற வேண்டும். ஒரு 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் அதிலுள்ள நீர் சொட்டும் படி செய்யவேண்டும். பிறகு ஒரு கனமான பொருளை அதன் மேல் வைக்க வேண்டும் . அப்ப கிடைப்பது தான் பாலாடைக்கட்டி.

இதைக்கொண்டு பல உணவுகள் தயாரிக்கலாம்

பாலாடைக்கட்டி பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு திட உணவாகும். அது மென்மையாகவோ கடினமாகவோ இருக்கும். அது பாலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதால் உருவாகிறது. அதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்படுகிறது. 'பனீர்' நல்ல மிருதுவாக வர, எலுமிச்சை சாறு சேர்க்கும் போது தயிர் அல்லது 'ஃபிரெஷ் கிரீம் ' கொஞ்சம் சேர்க்கணும்.

வடிக்கட்டும் போது வெளியேறும் நீர் 'Whey Water' எனப்படும் ; அதை ஒரு 4 நாள் ஃபிரிஜ் இல் வைத்து பயன் படுத்தலாம். எதற்க்கு என்று கேட்கிறீர்களா? மீண்டும் பனீர் செய்ய அல்லது சப்பாத்தி பிசைய . சரியா?

பாலாடைக்கட்டியில் புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகமாக உள்ளது. மேலும் அதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றூம் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன.