Friday, July 22, 2011

இஞ்சி டீ

இஞ்சி டீ - இது ரொம்ப சுலபம் :)

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் துருவின இஞ்சி
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து துருவின இஞ்சி போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் துருவின இஞ்சி போடுவதால் சில சமயம் கசக்க வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.

பனங்கல்கண்டு ஜலம்

சோம்பு பிடிக்காத வா இதை குடிக்கலாம் :)

தேவையானவை:

நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
பனம் கல்கண்டை போடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அளவுக்காவது சூடு இருக்கணும்.

சோம்பு ஜலம்

தேவையானவை:

சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் சோமபை சுத்தம் செய்து போடவும்.
1 ஸ்பூன் நெய் விட்டு பொன் வறுவலாக வறுக்கவும் .
நல்ல மணம் வரும், அப்ப 4 டம்ளர் தண்ணீரையும் விடவும்
அடுப்பை நிதானமாக எரியாவிடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் பனம் கல்கண்டை போடவும்.
மீண்டும் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் சோம்பு ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.

வாழைப்பழ மில்க் ஷேக்

தேவையானவை:

நல்ல கனிந்த வாழைப்பழம் 2 (பொதுவாக கற்பூர வாழை ரொம்ப குளுமை அது கிடைத்தால் ரொம்ப நல்லது )
பால் 1 கப்
சக்கரை தேவையான அளவு
தேவைப்பட்டால் ஏலப்பொடி அல்லது எசன்ஸ்

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸில போட்டு அடிக்கவேண்டியது தான்.
உடனே குடிக்க வேண்டியது தான் ;) ;) ;)

வெந்தய பொடி

இது நாம் செய்யும் எல்லா குழம்புகளுக்கும் வேண்டும். என்னதான் குழம்பு பொடி செய்யும் போது வெந்தயம் போட்டு அரைத்தாலும் , மேலுக்கு இதையும் போடணும் அப்ப தான் குழம்பு மணக்கும். தினமும் குழம்பு செய்யும் முன் வறுத்து பொடித்து போடணும். முடியாதவர்கள் 1 வாரம் 10 நாளுக்கு சேர்த்து வறுத்து அரைத்து வைத்து கொள்ளலாம் .

எல்லா ஊருகாய் களுக்கும் இது தேவைப்படும்.

தக்காளி சாதம், கத்தரிக்காய் சாதம், புளியோதரை போன்ற கலந்த சாதங்களுக்கும் பயன்படும்.

100 கிராம் வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்யவும்.
வரட்டு வாணலி இல் போட்டு நல்ல சிவப்பாக கருகாமல் வறுக்கவும்.
நல்ல மணம் வந்ததும், ஒரு தட்டில் கோட்டவும்.
ஆறினதும் மிக்ஸில பொடிக்கவும்
பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தேவைப்படும் போது உபயோகிக்கவும்.

கரம் மசாலா பவுடர்

தேவயானவை:

தனியா 50 கிராம்
மிளகு 20 கிராம்
பட்டை 20 கிராம்
சீரகம் 15 கிராம்
பெரிய ஏலக்காய் 15 கிராம்
கிராம்பு 10கிராம்
சிறிய ஏலக்காய் 10 கிராம்
பிரிஞ்சி இலை 10 கிராம்

செய்முறை :
எல்லாவற்றயும் லேசாக வறுத்து பொடிக்கவும்.
Microwave வில் சுட வைத்தாலும் போரும்.
காற்று புகாமல் முடி வைத்து உபயோகப்படுத்தவும்.

கறிப்பொடி

பலசுவைகளில், பல முறைகளில் இதை தயாரிக்கலாம் நாம் சிலது பார்க்கலாம்

தேவையானவை:

குண்டு மிளகாய் வற்றல் 10 -12
தனியா 2 -3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கச கசா - 2 டீ ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
தேங்காய் - துருவியது 1/2 கப் ( வரட்டு வாணலி இல் சிவக்க வருக்க்வும்)

செய்முறை:

எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும்.
குருமா அல்லது கறி செய்யும் போது உபயோகப்படுத்தலாம்.

குறிப்பு: தேங்காய் சேர்ப்பதால் ஃபிரிஜ் ல வைக்கவும்.

டீ மசாலா பவுடர்

தேவையானவை:

ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 10
பட்டை கொஞ்சம்
ஜாதிக்காய் 1/2

செய்முறை:

எல்லாவற்றையும் பொடிக்கவும்.
டீ போடும் போது ஒரு சிட்டிகை போடவும
மண மணக்கும் டீ ரெடி

முருங்கை இலை பொடி

தேவையானவை:

முருங்கை இலைகள் 1 கப்

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை:

முருங்கை இலையை சுத்தம் செய்து, அலம்பி வடிய விடவும்.
வாணலி இல் துளி நெய்விட்டு வதக்கவும்.
தனியே வைக்கவும்
வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, பூண்டு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.


பொட்டுக்கடலை பொடி

தேவையானவை:

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்.
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
வேண்டுமானால் வறுத்த காய்களின் மேல் தூவலாம், நல்லா இருக்கும்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை :

கறிவேப்பிலை 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
புளி சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )

செய்முறை:

முதலில் கறிவேப்பிலையை அலம்பி வடிய விடணும்.
வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
வறுத்தத்தை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
அதை தட்டில் கொட்டி வைக்கவும்
புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
அதையும் தனியே வைக்கக்ணும்.
பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
கமகமக்கும் கறிவேப்பிலை பொடி தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போரும்.

எள்ளுப் பொடி (காரம் )

தேவையானவை:

25 - 35 குண்டு மிளகாய்
1 /4cup கருப்பு எள்
உப்பு.

செய்முறை:

கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
ஒரு சொட்டு எண்ணெய் மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு மிகவும் பொடியாக அரைக்கவும்.
எள்ளுப் பொடி ரெடி.
எள்ளுப் பொடி ரொம்ப மணமாக இருக்கும்.
இதை போட்டு சாதம் கலந்து சாப்பிடலாம், லஞ்ச் பாக்ஸ் கட்டலாம்.
நன்றாக இருக்கும்.

கொள்ளு பருப்பு பொடி

தேவயானவை :

துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 2 கப்
மிளகு – 2 ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் – 10 -15
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளை போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். மேலும் BP காரர்களும் உப்பு பற்ற்ய பயம் இல்லாமல் சாப்பிடலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

வேர்கடலை பொடி 2

தேவயானவை:
1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
1/2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் வறுத்த எள்
10 மிளகாய் வற்றல் (குண்டு)
10 -12 பூண்டு
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
சுவையாக இருக்கும்.

வேர்கடலை பொடி

தேவயானவை:

2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் எள்
15 மிளகாய் வற்றல் (குண்டு)
1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

வெறும் வாணலி இல் எள்ளை வறுக்கவும்.
நன்கு பட பட வென் வெடித்ததும், தட்டில் கொட்டிவைக்கவும்.
துளி எண்ணை விட்டு மிளகாய் வற்றல் லை வறுக்கவும்.
வேர்கடலையும் போட்டு வறுக்கவும்.
மிக்சி இல் எல்லாவற்றயும் போட்டு பொடிக்கவும்.
வாசனை மிகுந்த 'வேர்கடலை பொடி' தயார்.
சாத்ததில் போட்டு சாப்பிடலாம், அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளல்லாம்

உருளை கிழங்கு பொடி

தேவையானவை:

ஒரு பெரிய உருளை கிழங்கு
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
உருளை கிழங்கை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , உருளை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு:
இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.உருளை யை வேகவைத்தும் இது போல் செயலாம். ஆனால் உடனே உபயோகிக்கவேண்டும். நாள் பட வைத்துக்கொள்ள முடியாது.

வாழைக்காய் பொடி

தேவையானவை:

ஒரு பெரிய வாழைக்காய்
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
வாழைக்காயை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , வாழை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த வாழைக்காய் பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.

பூண்டு பொடி 2

தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
3 - 4 குண்டு மிளகாய்
உப்பு

செய்முறை:
எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

பூண்டு பொடி

தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

வறட்டு தனியா பொடி

தேவையானவை:

1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )

செய்முறை:

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

கருப்பு உளுந்து பொடி

தேவையானவை :

1 கப் கருப்பு உளுந்து
6 -8 மிளகாய் வற்றல்
ஒரு கைப்பிடி காய்ந்த கறிவேப்பிலை
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
பாட்டில் ல எடுத்து வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதை தோசைக்கும் தொட்டுக்கலாம்

கறிவேப்பிலை பருப்பு பொடி

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
1 கொத்த்து கறிவேப்பிலை ( நன்கு காய்ந்தது )
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
காய்ந்த கறிவேப்பிலை யும் அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் ஆனால் வாசனையாக நன்ன்றாக இருக்கும்.

பூண்டு பருப்பு பொடி

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
(பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

பருப்பு பொடி

பருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது.

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .
இதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.
சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம்

தேங்காய் பொடி

இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.

1 Cup தேங்காய் துருவல்
1 Tea spoon உளுத்தம் பருப்பு
1 Tea spoon கடலை பருப்பு
10 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.

ராஜஸ்தானி மசாலா பவுடர்

தேவயானவை:

சீரகம் வறுத்து பொடித்தது 2 டேபிள் ஸ்பூன்
ஆம் சூர் ( மாங்காய் பொடி ) 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு 1/2 ஸ்பூன்
மிளகு பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/2 ஸ்பூன்

எல்லாவற்றயும் கலந்து வைக்கவும்.
கறி வகைகளுக்கும் குருமா விற்கும் சேர்க்கவும்.

கறி மசாலா பொடி

இது போல் பல பொடிகள் இருக்கு . சுவைக்காக மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை:

குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்

செய்முறை:

வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து எடுத்து வாக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.

குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என் நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

டீ மசாலா பொடி

இது ரொம்ப நல்லா இருக்கும் . முயன்று பாருங்கள் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2

எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.

கூட்டு பொடி

இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> நாங்க் வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி.

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கோட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்கை துருவலை நான்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்கும் முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கலாம்.

பிசிபேளா பாத் பவுடர்

பல வருடங்களாக எங்க வீட்டில் உபயோகப்படுத்தும் பொடி. இங்கு சொன்ன அளவுக்கு 2 ஹர்லிக்க்ஸ் பாட்டில் அளவு வரும். வருஷத்துக்கு வைத்துக்கொள்ளலாம். எங்க கிருஷ்ணா இந்த பொடியை உருளைகிழங்கு காய் செய்யவும் உபயோகப்படுத்துவான். ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை :

250 Gms. தனியா
500 Gms. கடலை பருப்பு
250 Gms. குண்டு மிளகாய்
100 Gms. கச காசா
25 Gms. மராட்டி மொக்கு
25 Gms. அன்னாசிப்பூ
25 Gms. பட்டை
25 Gms. வெந்தயம்

செய்முறை :

முதலில் வெந்தயத்தை வறட்டு வாணலில் நன்கு வறுக்கவும்.
பிறகு துளி எண்ணெய் விட்டு வாணலி யை துடைக்கவும்.
(Just grease the pan )
பிறகு மற்ற பொருட்களை தனி தனியாக வறுத்து எடுக்கவும்.
கருகாமல் வறுக்கணும் .
பிறகு மிக்சியில் பொடிக்கணும்.
அவ்வளவு தான்.
பிசிபேளா பாத் பவுடர் ரெடி.
பாட்டில் லில் போட்டு வைக்கவும்.
சுமார் 2 வருஷத்துக்கும் மேலாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: பிசிபேளாபாத் செய்யவேண்டும் எனில், குக்கரில் காய், துவரம் பருப்பு, அரிசி ஒன்றாக வைத்து விட்டு, வெளியே எடுத்ததும், இந்த பொடி போட்டு, புளி பேஸ்ட் போட்டு ஒரு கொதி விடலாம். அல்லது, சாதாரணமாக சாம்பார் செய்வது போல் இந்த பொடி போட்டு சாம்பார் செய்து விட்டு பிறகு சாதம் போட்டு கலக்கலாம். எப்படி பண்ணாலும் 'அமிர்தமாக' இருக்கும்.

கண்ண்டிப்பாக பக்கத்தாத்து மாமி கேட்பா "என்ன சமைக்கிற?" என்று புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
சமைத்து பார்த்து சொல்லுங்கள் யாரானும். அபப தான் மற்றவர்கள் ஆர்வம் வந்து முயலுவார்கள் .

கரம் மசாலா பவுடர்

தேவயானவை:

தனியா 50 கிராம்
மிளகு 20 கிராம்
பட்டை 20 கிராம்
சீரகம் 15 கிராம்
பெரிய ஏலக்காய் 15 கிராம்
கிராம்பு 10கிராம்
சிறிய ஏலக்காய் 10 கிராம்
பிரிஞ்சி இலை 10 கிராம்

செய்முறை :
எல்லாவற்றயும் லேசாக வறுத்து பொடிக்கவும்.
Microwave வில் சுட வைத்தாலும் போரும்.
காற்று புகாமல் முடி வைத்து உபயோகப்படுத்தவும்.

தோசை மிளகாய் பொடி எள்ளுடன்

தேவையானவை:

1cup கடலை பருப்பு
1cup உளுத்தம் பருப்பு
25 - 35 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
1 /4cup கருப்பு எள்
உப்பு.
துளி எண்ணெய்

செய்முறை:

கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
தனியே வைக்கவும்.
மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
எள் போட்ட தோசை மிளகாய் பொடி ரெடி.
எள் போடுவதால் ரொம்ப மணமாக இருக்கும்.

தோசை மிளகாய் பொடி (plain)

தேவையானவை:

1cup கடலை பருப்பு
1cup உளுத்தம் பருப்பு
25 - 35 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
உப்பு.
துளி எண்ணெய்

செய்முறை:

வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
தனியே வைக்கவும்.
மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
தோசை மிளகாய் பொடி ரெடி.

குறிப்பு: சிலர் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்ப்பார்கள். வேண்டுமானால் நீங்களும் சேர்க்கலாம்.

" ரச பொடி"

தேவையானவை:

10 - 15 குண்டு மிளகாய்
800gm தனியா
200gm மிளகு
200gm துவரம் பருப்பு
2 - 3 தேக்கரண்டி சீரகம்

செய்முறை:

மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரக்கவும்.
'ரச பொடி ' ரெடி.

குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன்.
உங்களுக்கு விருப்பமானால் மேல் கூறிய சாமான்களுடன் பத்து பல் பூண்டும் போட்டு அரைக்கலாம். ஆனால் அப்படி அரைத்தால், ரசப்பொடியை fridge இல் வைக்கணும். ஏன் என்றால் அது சற்று ஈரபசையுடன் இருக்கும்.

பாதாம் ஹல்வா

பாதாம் ஹல்வா - சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .

தேவையானவை:

பாதாம் பருப்பு 2 கப் விழுது (250 கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் - 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை:

பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில் கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட "பாதாம் ஹல்வா" வை பரிமாறவும்.

குறிப்பு:வேண்டுமானால் ஆறினதும், ஒவ்வோர் ஸ்பூன் எடுத்த்கு ஒரு அலுமினிய foil ல போட்டு மடித்து வைத்தால் சர்வ் பண்ண சௌகர்யமாக இருக்கும்.

அதிரசம்

இது கால்ம் காலமாய் நாம் செய்து வரும் இனிப்பு. தெற்க்கு பக்கத்தில் இது இல்லாம்ல் தீபாவளி கிடையாது :) தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் நோன்புக்காக செய்வது இந்த இனிப்பு. கொஞ்சம் மெக்கெடனும் ஆனால் ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை:

பச்சரிசி 1/2 கிலோ
வெல்லம் 1/4 கிலோ
எண்ணை - பொறிக்க
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை கல் குப்பை நீக்கி, களைந்து உலர்த்தனும்.
ஒரு 3 மணி நேரம் காயனும்.
ரொம்பவும் காய கூடாது, கொஞ்சம் ஈரமாக இருக்கும் போதே மிக்ஸில மாவாக அரைக்கணும்.
நன்கு சலிக்கவும்.
வெல்லத்தை எடுத்து உடைத்து 3/4 கப் தண்ணீரில் போடவும் .
அது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் முன், வடி கட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லாவிடில் பொங்கிவிடும்.
பாகு கொஞ்சம் கெட்டியாக துவங்கும் போது, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணி எடுத்து வைத்துக்கொண்டு, இந்த பாகிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அதில் விடவும்.
உங்கள் கைவிரல்களால், பாகை உருட்ட முடிந்தால் சரியான பதம் என பொருள்.
இல்லாவிட்டால் இன்னும் கொதிக்கணும் என பொருள் . சரியா?
பதம் சரி என பட்டதும் அடுப்பை சின்னதாக்கி விட்டு, ஏலப்பொடி போடவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு பெரிய பேசினில், அரிசி மாவை போடவும் .
இந்த பாகிலிருந்து ஒரு கரண்டி அதில் விடவும்.
அதை கலக்கவும்.
மீண்டும் மாவில் பாகை விடவும் , கலக்கவும்.
இதற்க்கு "பாகு செலுத்துதல்" என்று பெயர்.
[b]மாவில் பாகை கொஞ்சம் கொஞ்சமாக போடணும் பாகில் மாவை கொட்டக்கூடாது[/b]
[color=red][/color]
இப்படி யாக கெட்டியான அதிரச மாவை தயாரிக்கணும்.
கொஞ்சம் பாகு மீந்து போனால் பரவாயில்லை, பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.
அதிரசமாவை நன்கு பிசைந்து வைத்துவிடவும்
2 நாள் கழித்து கூட அதிரசம் பண்ணலாம்.
மாவு ஒன்றும் ஆகாது.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு இந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து அதிரசம் தட்டி எண்ணை இல் போடவும்.
அடுப்பு நிதானமாய் எரியவேண்டும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடணும்.
வெளியே எடுத்து மற்றும் ஒரு கரண்டியால் அதிரசத்தை நன்கு அழுத்தி எண்ணையை வடித்துவிட்டு தட்டில் போடணும்.
அவ்வளவுதான் சுவையான அதிரசம் தயார்

[b]குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை சேர்த்து செய்வார்கள் .[/b]

7 கப் கேக்

ரொம்ப சுலபமான இனிப்பு இது. 7 கப் சேர்த்து செய்வதால் அந்த பெயர். கிளறுவதும் ஈஸி, கட் பண்ணினால் நல்ல கேகாகவும் வரும்.

தேவையானவை:

சக்கரை 3 கப்
நெய் - 1 கப்
தேங்காய் - 1 cup
கடலை மாவு - 1 கப்
பால் - 1 கப்
வெனில எல்சன்ஸ் - சில துளிகள்

செய்முறை :
ஒரு தட்டில் நெய் தடவி தயாராய் வைக்கவும்.
ஒரு அடி கனமாக உருளி இல் எல்லாவற்றி யும் போட்டு நன்கு கலக்கவும்
கலவை நன்கு கொதித்து நெய் பிரியும் வரை கிளறவும்.
அடுப்பு நிதானமாக எரியவேண்டுவது அவசியம்.
நெய் பிரிந்து வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டவேண்டும்.
கொஞ்சம் அறினதும் விலைகள் போடலாம்.
7 கப் கேக் ரெடி.

Blog Archive