Wednesday, August 17, 2011

வடை

பண்டிகை நாட்களில் உளுந்து வடை செய்யும்போது கொஞ்சம் கடலை பருப்பு கொஞ்சம் துவரம் பருப்பு சேர்த்து நனைக்கணும்.

தேவையானவை:

உளுந்து 1 கப்
கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 ஸ்பூன்
உப்பு
பச்சைமிளகாய் 2 -4
பெருங்காயம் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - நறுக்கி வைக்கவும்
பொறிக்க எண்ணை

செய்முறை:

பருப்புகளை நன்கு களைந்து , ஒரு 1/2 மணி ஊறவைக்கணும்.
மிக்சி இல் பச்சைமிளகாய் ,பெருங்காயம், கறிவேப்பிலை , உப்பு போட்டு நல்லா மசிய/ மட்டாய் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கணும்.
கிரைண்டர் இல் அரைத்தால் ரொம்ப நல்லா வடை பண்ணலாம்.
வாணலி இல் எண்ணை வைத்து , நிறையா மாவு எடுத்து நடுவில் கட்டை விரலால் ஓட்டை போட்டு வடை யை எண்ணை இல் போடணும்.
மெதுவாக போடணும்., இல்லாவீட்டால் எண்ணை மேலே தெறிக்கும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடணும்.
நல்லா பவுன் கலரில் வந்ததும், எடுத்துடனும்.
வடி தட்டில் போட்டு , எண்ணை வடிந்ததும், தனியே எடுத்து வைக்கவும்.
இப்ப வடையும் தயார் புன்னகை

அப்பம்

அப்பம் - இது ரொம்ப நல்ல நைவேத்யம் . நான் எப்பவும் இதை நெய் இல் தான் செய்வது வழக்கம் . இதை கரைத்தும் அரைத்தும் செயலாம் முதலில் கரைத்து செய்வது.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 3/4 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

செய்முறை:

மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும்.
வாழை பழத்தை துருவவும்.
அதில் போடவும்.
ஏலப்பொடி போடவும்
சோடா உப்பு போடவும்
வெல்லத்தை துருவி போடவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
பால் வேண்டுமானாலும் விடலாம்.
திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.

சுகியன்

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப்
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவுகளை போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும்.
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான். சொஜ்ஜி அப்பத்தின் உள்ளே வைக்கும் பூரணமும் இது தான் புன்னகை
கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு தயார் புன்னகை

காரக்கடலை

தேவையானவை :

கடலை மாவு 1 கப்
பச்சை வேர்கடலை 3/4 கப் அல்லது 1 கப்
மிளகாய்போடி 2 ஸ்பூன்
பெருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
வேர்கடலைகள் மேல் மாவு நல்லா பூசி இடுக்கணும்.
எண்ணை யை சுடவைத்து உதிர்த்தார் போல் கடலைகளை போட்டு பொரித்து
எடுக்கணும்.

குறிப்பு: பெருமாளுக்கு பண்ணுவதால் மசாலா போடக்கூடாது. மற்ற நாட்களில், போடலாம் புன்னகை
கடலை மாவுக்கு பதில் மைதா உபயோகிக்கலாம். அப்போது ஒரு சிட்டிகை கேசரி கலர் போடணும்.

'காரா பூந்தி '

தேவையானவை :

2cup கடலை மாவு
2sp அரிசி மாவு
50gms முந்தரி பருப்பு
உப்பு தேவையான அளவு
மிளகாய்பொடி தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
1 /2sp பெருங்காய பொடி
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

முந்தரி பருப்பு தவிர மீதி பொருட்களை நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
சுவையான 'காரா பூந்தி ' ரெடி.

குறிப்பு: காரம் அதிகம் வேண்டுவோர் , பொறித்த பூந்தி இல் மீண்டும் உப்பு காரம் போட்டு குலுக்கிய பின் உபயோகிக்கவும்.

காரா சேவ்'

தேவையானவை :

2 1 /4cup கடலை மாவு
1cup அரிசி மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
உடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.
பவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.
மொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.

குறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.
ஆனால் அதர்க்கான மாவு ரொம்ப கெட்டியாக இருக்கணும் புன்னகை

மனங்கொம்பு

தேவையானவை :

2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்


செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

'ஓமபொடி'

2 தேவையானவை :

2cup கடலை மாவு
2cup அரிசி மாவு
1sp ஓமம்
2 -3 sp பட்டர் - வெண்ணை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டவும்.
ஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
வடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.
ஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.
அல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.

ரிப்பன் பகோடா

தேவையானவை :

1cup கடலை மாவு
1 1 / 2cup அரிசி மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.

தட்டை

தேவையானவை:

1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.
கர கரப்பான தட்டை ரெடி.

வெண்ணை முறுக்கு

வெண்ணை முறுக்கு - முறுக்கு என்றாலே வாயில் கரையனும். 'கடக்னூ' இருக்க கூடாது . அதிலும் இது வெண்ணை முறுக்கு அதனால் இது ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 3 -4 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல மெத்தென்று இருக்கணும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் , ஒரு கை நிறைய மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு சுற்ற வேண்டும். புன்னகை
மொத்த மாவையும் அப்படி கை முறுக்காக சுற்றவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, ஒவ்வொன்றாக அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'வெண்ணை முறுக்கு ' ரெடி .

குறிப்பு: முறுக்கு பதம் சரியா என் பார்க்க, நின்ற நிலை இல் ஒரு முருக்கை கீழே போடணும். ஓங்கி போடக்கூடாது, கை தவறி விழுவது போல் போடணும்.புன்னகை அப்ப அந்த முறுக்கு தூள் தூள் ஆக உடைந்தால் ரொம்ப சரியான பதம் இல்லா
விட்டால் ஊத்திக்கிச்சு என்று அர்த்தம் . சரியா? புன்னகை

சில முன்னேற்பாடுகள் அல்லது டிப்ஸ்

சில முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பக்ஷணங்களை சுலபமாக டென்ஷன் இல்லாமல் செயலாம் புன்னகை

வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் புன்னகை அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது புன்னகை

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா? புன்னகை

எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.

1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் ‘டாங்கர்’ பச்சடி’ செயல்லாம்.

நமக்கு இது எல்லா பாயாசம், சக்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் என எல்லாவற்றிக்கும் தேவை. எனவே இதை மொத்தமாக பொடித்து வைப்பது நலம்.

ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்காவின் தோலும் உபயோகப்படும்.

கோலம் போட 1/2 அரிசி யை நனைத்து வையுங்கள். சீடை பொறியும் போது ஒரு பக்கம் அரைத்து விடலாம்.

தேங்காய் யை உடைத்து 1 மூடி துருவவும். 1 மூடியை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும். சுய்யனுக்கும் துருவி வைக்கணும்.

இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்

வெல்ல சீடை

அடுத்தது வெல்ல சீடை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கி வைத்தது 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
ஏலப்பொடி பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு உருளி இல் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போடவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், தேங்காய் , ஏலப் பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, போட்டு இறக்கிவைத்து நன்கு கிளறவும்.
நெய்விடவும்.
கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடை யை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
நல்லா மருதாணி பற்றியது போன்ற கலர் இல் - மெருன் கலரில் வரும் புன்னகை.
'கரகர' ப்பான 'வெல்ல சீடை ' ரெடி

குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
இது வும் ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் புன்னகை
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி வைத்து கொண்டால் அப்பத்துக்கும் போடலாம்.
இது பெருமாளுக்கு நைவேத்தியம் என்பதால் வாயி இல் போட்டுக்கொண்டு பார்க்க முடியாது. எனவே, சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம் . இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று அர்த்தம்

உப்பு சீடை

முதலில் உப்பு சீடை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டி )
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை' யாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'உப்பு சீடை ' ரெடி புன்னகை

குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது புன்னகை

1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் 'டாங்கர்' பச்சடி' செயல்லாம். செய்முறை அப்புறம் சொல்கிறேன்.

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள்

கிருஷ்ணஜெயந்திக்கு செய்யவேண்டியவை புன்னகை

கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .

சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் புன்னகை) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.

Blog Archive