Tuesday, July 22, 2014

'குழம்புமாவு உப்புமா '

குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் புன்னகை அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' . ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்.

பன்சி ரவா உப்புமா 2

தேவையானவை:

வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் ) 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும் புன்னகை
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

வெஜிடேபிள் இட்லி உப்புமா

தேவையானவை :

இட்லி 10 - 12
வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கவும் 
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க கொஞ்சம்
வேண்டுமானால் 1/2 டீ ஸ்பூன் பெருங்கயப்பொடி

செய்முறை :

இட்லி களை உதிர்த்து வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது உதிர்த்த இட்லி யை போட்டு நன்கு வதக்கவும்..
வேண்டுமானால் உப்பு போடவும்.
ஒரு 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கவும்.
சாம்பாருடன் பரிமாறவும்.
இதுவும் நல்லா இருக்கும்.

இட்லி உப்புமா :)

தேவையானவை :

இட்லி 10 - 12
தோசை மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க கொஞ்சம் 
வேண்டுமானால் 1/2 டீ ஸ்பூன் பெருங்கயப்பொடி

செய்முறை :

இட்லிகளை உதிர்த்து வைக்கவும். 
வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
இட்லி யை போட்டு நன்கு வறுக்கவும்.
வேண்டுமானால் துளி உப்பு போடலாம்.
உதிர்த்த இட்லியை வாணலி இல் போட்டு அது கொஞ்சம் வதங்கியதும், தோசை மிளகாய் பொடி தூவி, நன்கு கிளறி இறக்கவும்.
அருமையாக இருக்கும். 

பன்சி ரவை உப்புமா

தேவையானவை:

பன்சி ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு: கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் போட்டும் செய்யலாம். பன்சி ரவை என்றால் சோள ரவை; இந்து பெங்களூரில் ரொம்ப பிரபலம் புன்னகை

பிரெட் உப்புமா

தேவையானவை : 

6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை அப்படியே சாப்பிடலாம்.

ஜவ்வரிசி உப்புமா - சாபுதானா கிச்சடி

தேவையானவை: 

ஜவ்வரிசி 2 கப்
வெங்காயம் 2 (தேவையானால் - பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 6 - 8
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு - பொடியாக நறுக்கியது 1 கப்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடித்த வேர்கடலை - 1/2 cup
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
2 மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு போட்டு வதக்கவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஊறவைத்துள்ள ஜவ்வரிசியை பிழிந்து போட்டு கிளறவும்.
அது வெந்ததும், பொடித்துவைத்துள்ள வேர்கடலை மற்றும் சர்க்கரை தூவி கிளறவும்.
பிறகு அதன் மேலே கொத்துமல்லி மற்றும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
இந்த ஜவ்வரிசி உப்புமா வெறுமனேவே நல்லா இருக்கும்; ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.

'சேமியா ரவா உப்புமா '

தேவையானவை:

வறுத்த ரவை 1 கப்
வறுத்த சேமியா 2 கப் 
பச்சை மிளகாய் 6 -8
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை மற்றும் சேமியாவை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை மற்றும் சேமியா நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'சேமியா ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

அவல் உப்புமா - போஹா உப்புமா 2

தேவையானவை: 

கெட்டி அவல் 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 6 - 8
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
உருளைகிழங்கு - பொடியாக நறுக்கியது 1 கப் 
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் 
காரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

கெட்டி அவலை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
அழுக்குகள் போனதும் நன்கு பிழிந்து வடிய விடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு மற்றும் காரட் துருவல் போட்டு வதக்கவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பிழிந்து வைத்துள்ள அவலை போட்டு கிளறவும்.
இது நன்கு வெந்ததும், அதன் மேலே கொத்துமல்லி மற்றும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
இந்த வெஜிடபுள் அவல் உப்புமா வெறுமனே வே ரொம்ப நல்லா இருக்கும்.
[b]குறிப்பு : இந்த உப்புமா காலை வேளைகளில் செய்வதும்  ரொம்ப சுலபம் சாப்பிடவும் நல்லா இருக்கும் :)[/b]

அவல் உப்புமா

தேவையானவை: 

கெட்டி அவல் 1 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 6 - 8
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

கெட்டி அவலை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
அழுக்குகள் போனதும் நன்கு பிழிந்து வடிய விடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பிழிந்து வைத்துள்ள அவலை போட்டு கிளறவும்.
ஒரே நிமிடத்தில் இது நன்கு வெந்தது விடும்.
அதன் மேலே கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
தேங்காய் சட்டினி தவிர வேறு எந்த சட்னிஉடனும் பரிமாறலாம்.
டொமாடோ கெட்ச் அப் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இந்த உப்புமாவை ரொம்ப சிக்கிரம் செய்து விடலாம். காலை வேளைகளில் டிபனுக்கு ரொம்ப நல்லா இருக்கும். மதியம் வரை பசிக்காது. மதிய உணவு டப்பாக்கு கூட நல்லா இருக்கும். முயன்று பாருங்கள் புன்னகை

'ஓட்ஸ் உப்புமா '

தேவையானவை:

வறுத்த ஓட்ஸ் 1 கப் 
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 6 - 8
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன் 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய்1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு கனமான வாணலி இல் ஓட்ஸ் ஐ வறுக்கவும்.
ஆற வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, வறுத்த ஓட்ஸ் ஐ போட்டு வறுக்கவும்.
1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் மட்டாக தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ஓட்ஸ் நன்கு வெந்ததும் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'ஓட்ஸ் உப்புமா ' தயார்.

குறிப்பு: தேவையானால் இந்த உப்புமாவில் உங்களுக்கு பிடித்த காய் கறிகளை போடலாம் அல்லது முந்திரி வறுத்து போடலாம்.

ஊட்டச்சத்தான உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை 1/2 கப்
சோள ரவை (பன்சி ரவா ) 1/2 கப் 
வறுத்த ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பச்சை மிளகாய் 6 - 8

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன் 
பெருங்கயப்பொடி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 ஸ்பூன் 
நெய் 3 - 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு கனமான வாணலி இல் கோதுமை ரவா மற்றும் சோள ரவையை வறுக்கவும்.
ஆற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, வறுத்த கோதுமை ரவை, சோள ரவை மற்றும் ஓட்ஸ் ஐ போட்டு வறுக்கவும்.
1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் தக்காளி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'ஊட்டச்சத்தான உப்புமா ' தயார்.
ஐஸ் டீ உடன் பரிமாறவும்.

'வெஜிடபள் கோதுமை ரவா உப்புமா '

தேவையானவை:

கோதுமை ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
மிளகாய் வற்றல் 6 - 8 
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
பெருங்கயப்பொடி - 1/2 ஸ்பூன்
எண்ணை 3 - 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, கோதுமை ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'வெஜிடபள் கோதுமை ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள சாம்பார் நல்லா இருக்கும்.

கோதுமை ரவா உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை 2 கப்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
பெருங்கயப்பொடி - 1/2 ஸ்பூன் 
எண்ணை 3 - 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு 

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, கோதுமை ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'கோதுமை ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கு இது ரொம்ப நல்லது புன்னகை எந்த ரவை யானாலும் எண்ணெய் அல்லது நெய் இல் வறுப்பதால் தண்ணீர் விட்டு கிளறும்போது , உருண்டை உருண்டையாக / கட்டி தட்டாமல் நன்கு 'பொல பொல' வென வரும் .புன்னகை

ரவா கிச்சடி

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ் அல்லது 2 கப் புளி ஜலம் 
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வெந்ததும் இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும்.

ஜஸ்ட் ரவா உப்புமா :)

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
இஞ்சி துருவினது - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் 6 -8

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பச்சை மிளகாய் இஞ்சி போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

ரவா உப்புமா

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு : தேவையானால் பிரட் ஐ சிறு துண்டுகளாக வெட்டி, நெய் இல் வறுத்து கடைசி இல் உப்புமாவில் போட்டு கிளறலாம், நல்லா இருக்கும். வேண்டுமானால் பச்சை வேர்கடலை போடலாம் புன்னகை

புளி உப்புமா / புளிப்பொங்கல்

இதற்கும் அரிசியில் இருக்கும் நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ உடைத்துக்கொள்ளவும்.

தேவையானவை : 

உடைத்த அரிசி அல்லது குருணை - 2 cup
நல்லெண்ணெய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வற்றல் மிளகாய் 4 -5
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ + ஒரு கைப்பிடி அளவு பச்சை வேர்கடலை 
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
புளி ஜலம் - 3 கப் அல்லது புளி பேஸ்ட் 2 டீ ஸ்பூன் 

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் வேர்கடலை எல்லாம் தாளிக்கவும்.
ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, புளி ஜலம் + தண்ணீர் வாணலி இல் விடவும்.
உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
நன்கு கிளறவும்.
மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
தண்ணீர் தேவையானால் விடவும்.
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
வெறும் தயிர அல்லது ஒன்றுமே கூட வேண்டாம் இதற்கு , அப்படியே ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை 

Blog Archive