Monday, June 22, 2015

பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " 2

பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " 2



இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும்கீரை இல் செய்வது இது. புன்னகை

தேவயானவை:

வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
உப்பு
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
கிளறவும். உப்பு போடவும்.
கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.

குறிப்பு : இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.

பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா "

பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா "


தேவயானவை :

பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது - 1/2 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பால் - 1/2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் 1/4 கப்

செய்முறை:

ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
நன்கு கலக்கவும்
பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
போடவும்.
மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
சப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.

ஆலு மேத்தி சப்ஜி

ஆலு மேத்தி சப்ஜி


தேவையானவை :

1 /2
கிலோ உருளைக்கிழங்கு
1 / 4
கிலோ வெங்காயம்
1
பெரிய கட்டு வெந்தயக்கீரை
காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி அல்லது பச்சை மிளகாய்

தளிக்க:

கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
எண்ணெய்
தேவையான அளவு உப்பு
பெருங்காயப்பொடி
மஞ்சள் பொடி

செய்முறை :

உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைக்கவும்.
தோல் உரிக்கவும் , சதுரங்களாக வெட்டி வைக்கவும்.
வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கவும்.
வெங்காயத்தை நறுக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போடவும்.
வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும், நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை தூவி நன்கு கிளறவும்.
எல்லாமாக ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
வெந்தய மணமாக சப்ஜி ரொம்ப நல்லா இருக்கும்.

ஆலு - சன்னா

ஆலு - சன்னா


தேவையானவை :

ஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை
இரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
இரண்டு பெரிய வெங்காயம்
4 - 5 பச்சை மிளகாய்
ஒரு இன்ச் இஞ்சி துண்டு
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் கடுகு
கொத்துமல்லி இலைகள் கொஞ்சம்
கறிவேப்பிலை இலைகள்
கொஞ்சம் மஞ்சள் பொடி
உப்பு
எண்ணெய்

பொடிக்க வேண்டியவை:

கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.

செய்முறை :

வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய் , துருவின இஞ்சி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நறுக்கின வெங்காயத்தை போடவும்.
வதக்கவும்.
வேக வைத்த கொத்துக்கடலை யை போட்டு நன்கு மசிக்கவும்.
மேலே சொன்ன பொடியை ஒரு சின்ன ஸ்பூன் போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு மசிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
கொஞ்சம் சேர்ந்தாற்போல ஆனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை போடவும்.
நன்கு கிளறவும்.
சேர்ந்தாற்போல ஆனதும் இறக்கவும்.
வாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இதை சப்பாத்தி இல் வைத்து சுருட்டி அலுமினியம் foil இல் சுற்றி மத்தியானத்துக்கு வைக்கலாம். லஞ்ச் க்கு வைக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்.

புளிச் சட்னி

புளிச் சட்னி


100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.

இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.

குறிப்பு:பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

தித்திப்பு சட்னி

தித்திப்பு  சட்னி


தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .

குறிப்பு: இதுவும் சமோசா மற்றும் பேல் பூரிக்கு தொட்டுக்கொளள நல்லா இருக்கும் . குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

கார சட்னி அல்லது பச்சை சட்னி

கார சட்னி அல்லது பச்சை சட்னி


தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

குறிப்பு: இந்த சட்னி சமோசா, பேல் பூரிக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்

பாம்பே சட்னி 2

பாம்பே சட்னி  2

தேவையான பொருள்கள்:

துவரம்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம்- 1
சிவப்பு மிளகாய்-3
தக்காளி-1
கறிவேப்பிலை,கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க

செய்முறை:


முதலில் துவரம்பருப்பை வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்துக்கொள்ளவும் (கருகி விடாமல்)
பிறகு வறுத்த பருப்பை ஆறவிட்டு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு ஊறியதும் அதனுடன் வெங்காயம் , தக்காளி, மிளகாய்,
சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து போட்டு வெடித்ததும்
கறிவேப்பிலை போட்டு நாம் அரைத்து வைத்துள்ள சட்னிய தண்ணீர் விட்டு
கலந்து ஊற்றவும்.
நன்கு சட்னி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

வெங்காய சட்னி 3

வெங்காய சட்னி  3


தேவையானவை :

2 -3
பெரிய வெங்காயம்
10 -12
குண்டு மிளகாய் வற்றல்
2
தக்காளி
1/2
ஸ்பூன் கடுகு
1/2
ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
1/2
ஸ்பூன் எண்ணை

செய்முறை:
மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயத்தை உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான துவையல் / சட்னி ரெடி.

வெங்காய சட்னி 2

வெங்காய சட்னி 2 


தேவையானவை :

2 -3
பெரிய வெங்காயம்
10 -12
குண்டு மிளகாய் வற்றல்
2
தக்காளி
1/2
ஸ்பூன் கடுகு
1/2
ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2
ஸ்பூன் எண்ணை

செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
இது நல்ல கலர் ஆக இருக்கும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.

வெங்காய சட்னி

வெங்காய சட்னி

வெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி . சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை கும் நல்லா இருக்கும்.

தேவையானவை :

2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை

செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.

Blog Archive