Monday, June 22, 2015

சோள ரொட்டி

சோள ரொட்டி


தேவையானவை :

சோளம் உதிர்த்து வேகவைத்தது 1 கப்
கோதுமை மாவு 2 கப்
பச்சை மிளகாய் 4 -5
பூண்டு 4 -5 பற்கள்
உப்பு
எண்ணெய் + நெய் சப்பாத்தி செய்ய

செய்முறை :

ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
உள்ளே வைக்கும் பூரணத்துக்கு, வேகவைத்த சோளம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சற்று  கரகரப்பாக அரைக்கவும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்ததை வதக்கி எடுக்கவும்.
அது நன்கு ஆறட்டும்.
பிறகு வழக்கம் போல, பூரணத்தை நடுவில் வைத்து சப்பாத்திகளாக இடவும்..
தோசை கல்லில் போட்டு , இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
சுவையான சோள ரொட்டி தயார் புன்னகை

No comments:

Blog Archive