Monday, June 22, 2015

பன்சி ரவா அதாவது சோள ரவை உப்புமா

பன்சி ரவா அதாவது சோள ரவை உப்புமா


தேவையானவை:

கால் கிலோ பன்சி ரவா அதாவது சோள ரவை
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு , பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள்- எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க -கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
காரத்துக்கு பச்சை மிளகாய் 
தேவையானால் -எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொஞ்சம் கொத்தமல்லி (நறுக்கியது)
உப்புமா செய்ய நெய்யும் எண்ணெய் யும் கலந்து வைத்துக்கொள்ளவும்
 உப்பு 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு ,கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
இங்கு பெங்களூரில் இந்த ரவை நிறைய கிடைக்கிறது புன்னகை

No comments:

Blog Archive