Friday, June 19, 2015

மல்டி கிரைன் சுண்டல்


தேவையானவை:

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது

குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்

கல்கண்டு சாதம்



தேவையானவை:

அரிசி - கால் கிலோ
கல்கண்டு - அரை கிலோ
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
முந்திரிப்பருப்பு - 10 -15
கிஸ்மிஸ் - திராட்சை - 10 -15
நெய் - 4 டேபிள் spoon.

செய்முறை:

அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
அடுப்பில் உருளி வைத்து கல்கண்டு போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும்.
சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
ஏலப்பொடி போடவும்.
குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
ரொம்ப தித்திப்பான சாதம் இது.
லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது

குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.