Friday, August 5, 2011

நவராத்திரி

நவராத்திரி - 9 நாளும் காலை பூஜை செயலாம், மாலை இல் சுண்டல் . வித விதமாய் செயலாம்.

ஆனால் இவை முக்கியம்:

ஆரம்ப நாள் அன்று : வடை , பாயசம், பண்டிகை சமையல்

செவ்வாய் கிழமை : அப்பம் குத்தணும்

வெள்ளிக்கிழமை: புட்டு பண்ணனும்

சனிக்கிழமை : எள்ளு பொடி ( எள்ளை பாகுவைத்தோ , இடித்தோ பண்ணலாம் , இடித்து பிடித்தால் ரொம்ப நல்லது )

சரஸ்வதி பூஜை: காலை இல் வடை , பாயசம் , அப்பளம் + பண்டிகை சமையல்

மாலை இல் வெள்ளை கொத்துக்கடலை சுண்டல்

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை - அன்று தர்ப்பணம் செய்தாலும் பண்டிகை போலத்தான். உளுந்து வடை , பாயசம் பண்ணனும். பருப்பு சாம்பார் பண்ணலாம், கலத்துக்கு பருப்பு , கறியமுது, சாற்றமுது பண்ணலாம்.

ஸ்ரீ ஜெயந்தி – கிருஷ்ண ஜெயந்தி

ஸ்ரீ ஜெயந்தி – கிருஷ்ண ஜெயந்தி புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> எனக்கு ரொம்ப பிடித்த பண்டிகை இது ஜாலி" longdesc="17" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி">

நாங்க கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடுவோம். வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .

சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல்,
உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.

18ம பெருக்கு / ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு – இதுவும் ரொம்ப சந்தோஷமான பண்டிகை. காவிரி ஆத்து ஓரமா
இருப்பவர்கள் ஆத்தன்கரை இல் போயி சாப்பிடுவா ; நாம் வீட்டுல சாப்பிடலாம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">
அன்று கலந்த சாதங்கள் அதாவது சித்திரான்னங்கள் செய்யனும்.

முதல் நாளே புளிக்காய்ச்சல் செய்து வைக்கணும். அப்ப தான் ஊறிண்டு நல்லா இருக்கும்.

புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம், உளுந்து வடை, பாயசம் , அப்பலாம், வற்றல் வாடம் வகைகள் பொரிக்கணும். தயிர் சாதத்துக்கு மோர்மிளகாய் பொரிக்கலாம்.

குறிப்பு: சிலர் எலுமிச்சை சாதம் கூட பண்ணுவா

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் – இது மட்டும் ஆண்கள் பண்டிகை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">

காலை இல் இட்லி , மதியம் பண்டிகை சமையல். அதாவது மோர்க்குழம்பு,
(வேண்டுமானால் பருப்பு குழம்பு செயலாம் ) கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, ஏதாவது ஒரு பாயசம். மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

பிரும்மச்சாரி பையன் இருந்தால் போளி மற்றும் அப்பம் பண்ணனும்

ஆடிப்பண்டிகை

ஆடிப்பண்டிகை – இந்த பண்டிகை தான் ஆரம்பம் , பிறகு வரிசையாக ஒரே பண்டிகைதான் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> தக்ஷிணாயன புண்ண்யகாலம். கல்யாணமாகி வரும் முதல் ஆடிப்பண்டிகை இன் போது மாமனார் மாப்பிள்ளைக்கு வெள்ளி தம்ளரில் தேங்கா பால் பாயாசம் தருவா புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> அது ரொம்ப முக்கியமான சடங்கு எங்களுக்கு.

தேங்காய் பால் பாயசம் , கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, மோர் குழம்பு,
மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

குறிப்பு: நாள் கிழமைகளில் வெறும் உளுந்து மட்டும் வடைக்கு ஊறப்போடக்கூடாது, கொஞ்சம் துவரம் பருப்பு மற்றும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து ஊரவைக்கணும்.

பண்டிகைகளும் சமையல்களும்

என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் வருஷப்பிறப்பிலிருந்து ஆரம்பிக்கலாம்.

சித்திரை முதல் நாள் – மோர் குழம்பு, கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, ஏதாவது ஒரு பாயசம், வேப்பம்பூ பச்சடி.

இந்த 6 சுவை பச்சடி இன்று முக்கியம். மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

குறிப்பு: நாள் கிழமைகளில் வெறும் உளுந்து மட்டும் வடைக்கு ஊறப்போடக்கூடாது, கொஞ்சம் துவரம் பருப்பு மற்றும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து ஊரவைக்கணும்.

Blog Archive