Tuesday, June 23, 2015

பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா


தேவையானவை:

பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அது போறும் புன்னகை )
காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்.


செய்முறை:
பனீரை சிறு துண்டுகளாக்குங்கள்.
வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள்.
அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, அடுப்பை ஸிம்மில் வையுங்கள்.
வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பிறகு அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.
கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
ப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!

பூரி...சாகு

பூரி...சாகு - இது கர்நாடகா ஸ்பெஷல் என்றே சொல்லலாம்

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சாகு செய்யத் தேவையானவை:

காலிஃப்ளவர் 1 கப்
உருளைக்கிழங்கு 1 கப் பொடியான நறுக்கவும்
வெங்காயம் 1 பொடியான நறுக்கவும்
பட்டாணி 1/2 கப்
காரட் 1/2 கப் பொடியாக நறுக்கியது
பச்சை சோளம் 1/2 கப்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
vegetable stock 1 கப் ( முடிந்தால் )
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி 1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1கொத்து
பெருங்காயம 1/2 டீஸ்பூன்

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்துவேகவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி il எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி வைக்கவும்.
பூரியுடன் பரிமாறவும்.

குறிப்பு: இதை தோசை யுடனும் கூட பரிமாறலாம். முக்கியமானது என்ன வென்றால்.... கடலை மாவு போட்டு கொதிக்கவைப்பதால் வெகுநேரம் வைத்திருக்க முடியாது, ஒரே வேளை இல் பயன்படுத்தி விடவேண்டும். சரியா?


'ஆலு மட்டர்' - உருளை கிழங்கு , பட்டாணி காய்

'ஆலு மட்டர்' - உருளை கிழங்கு , பட்டாணி காய்


தேவையானவை :

வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
உப்பு
சீரகம் 1 டீ ஸ்பூன்
எண்ணெய் 1 டீ ஸ்பூன்
நெய் 1 டீ ஸ்பூன்
மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
கொத்துமல்லி கொஞ்சம்

செய்முறை:

மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
கொஞ்சம் உப்பு போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் புன்னகை .

துவரம் பருப்பு டால்

துவரம் பருப்பு டால்

தேவையானவை :

1
கப் துவரம் பருப்பு
1
பெங்களூர் தக்காளி ( விதை நீக்கி நறுக்கவும் )
1
பெரிய வெங்காயம்
2
பச்சை மிளகாய் ( இரண்டாக நறுக்கவும்)
1 /2
ஸ்பூன் மிளகாய் பொடி
1 /2
ஸ்பூன் துருவின இஞ்சி
உப்பு
1
டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1
டீ ஸ்பூன் சீரகம்
1
டீ ஸ்பூன் கடுகு
1
டீ ஸ்பூன் தனியா
மஞ்சள் பொடி கொஞ்சம்
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி கால் ஸ்பூன்
1
டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி
1
டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்

செய்முறை:

துவரம்பருப்பை நன்கு களைந்து மஞ்சள் பொடி மற்றும் தக்காளி ,வெங்காயம்போட்டு குக்கரில் வைக்கவும்.
மூன்று நான்கு விசில் வரட்டும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு , முழு தனியா போட்டு தாளிக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெந்த பருப்பை இதில் கொட்டவும.
கொஞ்சம்கொதித்ததும் உப்பு , புளி பேஸ்ட் , மிளகாய் பொடி , வெந்தயப்பொடி எல்லாம் போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
ஒரு ஐந்து நிமிடம் கொதிக்கட்டும்.
பிறகு கொத்துமல்லி தூவி இறக்கவும்.
துவரம் பருப்பு டால் தயார்.
ரொட்டி, சாதம் மற்றும் புலவு வகைகளுக்கு நல்லா இருக்கும்.

Dal Fry with Channa dal

Dal Fry with Channa dal


தேவையானவை :

1
கப் கடலை பருப்பு
1
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2
பெங்களூர் தக்காளி ( விதை நீக்கி நறுக்கவும் )
1
டேபிள் ஸ்பூன் தனியா பொடி
1 /2
ஸ்பூன் ஆம்சூர் அதாவது மாங்காய் பொடி
1 /2
ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு
1
டேபிள் ஸ்பூன் வெண்ணை
1
டீ ஸ்பூன் கரம் மசாலா
1
டீ ஸ்பூன் சீரகம் கொஞ்சம்
மஞ்சள் பொடி கொஞ்சம்
கொத்துமல்லி கொஞ்சம்.
ஒரு சிட்டிகை சோடா உப்பு

செய்முறை:

கடலைப்பருப்பை நன்கு களைந்து சோடா உப்பு, மஞ்சள் பொடி மற்றும் ஒரு தக்காளி போட்டு குக்கரில் வைக்கவும்.
மூன்று நான்கு விசில் வரட்டும்.
வாணலி இல் வெண்ணை போட்டு சீரகம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
வதக்கவும்; பிறகு கடைந்த ,வெந்த பருப்பை இதில் கொட்டவும.
கொஞ்சம்கொதித்ததும் உப்பு , ஆம்சூர், கரம் மசாலா, தனியா பொடி எல்லாம் போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
பிறகு கொத்துமல்லி தூவி இறக்கவும்.
'Daal Fry'
தயார்.

'Mixed Daal '

'Mixed Daal '


தேவையானவை :

1 டேபிள் ஸ்பூன் பயத்தம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
4 - 5 பச்சை மிளகாய் (இரண்டாக நறுக்கவும் )
உப்பு
2 டேபிள் ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கடுகு ,
1 டேபிள் ஸ்பூன் சீரகம் கொஞ்சம்
மஞ்சள் பொடி கொஞ்சம்
கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவியது
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

எல்லா பருப்புகளையும் ஒன்றாக போட்டு, நன்கு களைந்து குக்கரில் வைக்கவும்.
மூன்று நான்கு விசில் வரட்டும்.
வாணலி இல் நெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
கடைந்த ,வெந்த பருப்பை இதில் கொட்டவும.
கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
'Mixed Daal ' தயார். சப்பாத்திக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

'பயத்தம் பருப்பு டால் '

'பயத்தம் பருப்பு டால்'

தேவையானவை :

1
கப் பயத்தம் பருப்பு (நன்கு வேக வைக்கவும்.)
2
பெங்களூர் தக்காளி (விதை நீக்கி நறுக்கி வைக்கவும் )
4 - 5
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1
உருளைக்கிழங்கு ( வேகவைத்து சிறு துண்டங்களாக்கவும் )
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கடுகு , சீரகம் கொஞ்சம்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
தேவையானால் இஞ்சி துருவியது கொஞ்சம்.

செய்முறை:

வாணலி இல் எண்ணெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி,பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைப்போடவும் .
நன்கு வதக்கவும்.
வெந்த பருப்பை இதில் கொட்டவும.
கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
'
பயத்தம் பருப்பு டால் ' தயார். சப்பாத்தி க்கு ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு வேண்டாதவா தவிர்க்கலாம் 

Blog Archive