Tuesday, August 30, 2011

அரிசி வடை

தேவையானவை:

புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 5 -6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .
நல்ல 'கரகரப்பாக 'வரும்.
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும் புன்னகை

கோபி 65

இது ரொம்ப சுவையான டிஷ் புன்னகை அருண், உங்களுக்காக கோபி 65 புன்னகை

இதோ செய்முறை புன்னகை

தேவையானவை :

காலிஃப்ளவர் 1 பூ
corn flour - அதாவது சோள மாவு 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கேசரி கலர் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை - பொறிக்க

செய்முறை:

காலிஃப்ளவர் ஐ குட்டி குட்டி பூக்களாக உதிர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள சூடு நீரில் உப்பு மட்டும் இந்த பூக்களை போடவும் .
இதில் பூச்சிகள் இருந்தால் அவை வெளியே வந்துவிடும்.
ஒரு 10 நிமிஷம் அப்படி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இந்த பூக்களை எடுத்து, போடவும்.
ஒரு முடியால் முடி வைக்கவும்.
இது ஒரு 5 நிமிடம் இருந்தால் போதுமானது.
அதில் இந்த பூக்கள் பாதி வெந்து விடும்.
ஒரு பேசினில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு மட்டாய் தண்ணி விட்டு கரைக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து, பூக்களி இந்த மாவில் முக்கி போட்டு பொரிக்கவும்.
அல்லது, எல்லா பூக்களியும் மாவில் கொட்டி, நன்கு பிசிறி, பிறகு பொரிக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.
corn flour என்பதால் நல்ல கரகரப்பாக வரும்.

குறிப்பு: சிலர் மைதா + அரிசி மாவு போட்டு செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும்.

மாலைநேர சிற்றுண்டிகள்

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

நெய் இல்லாத போளி

எனக்கு இவ்வளவு நெய் வேண்டாம் என்று சொல்பவர்கள் நெய் இல்லாமலே போளி
செயலாம். அதர்க்கான குறிப்பு இங்கே புன்னகை

தேவையானவை:

கடலை மாவு 1 கப்
பொடித்த சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் எண்ணை

செய்முறை:

கடலை மாவை துளி நெய் விட்டு சிவக்க வறுக்கவும். (கொஞ்சம் தான் புன்னகை )
ஆறினதும், சர்க்கரை பொடி ஏலப்பொடி போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு2 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, சப்பாத்தி போல் இடவும்.
அதன் மேல் பூரண கலவையை 1 -2 ஸ்பூன் போடவும்.
மெதுவாக மூடவும்.
மெல்ல ரொம்ப அழுத்தாமல் 'சப்பாத்தி போல் இடவும்'
கஷ்டமானால் அரைவட்டமாக மடித்து கொஞ்சமாய் இடவும். இது கொஞ்சம் சுலபம் புன்னகை
அது போல் எல்லாவற்றையும் செய்யவும்.பிறகு அடுப்பில் தோசை கல்லை போடவும்
இட்டு வைத்துள்ள போளியை எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
தேவையானால் நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான நெய் இல்லாத போளி தயார்.
இதை 1 வாரம் வரை கூட வைத்து இருக்கலாம், சாப்பிடும்போது, நெய் விட்டு தரலாம்.
வேண்டாம் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

தேங்காய் கோவா போளி

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
கோவா 1 கப் ( சக்கரை போட்டது )
சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் தேங்காய் துருவலை போடவும்.
சக்கரை ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும், கோவாவை உதிர்த்து போட்டு கிளறி இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
இது தான் பூரணம்
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி களை , ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

பருப்பு சக்கரை போளி

சிலருக்கு வெல்லம் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளது, அவர்கள் வெல்லத்துக்கு பதில் சக்கரை போட்டு செயலாம். ஆனால் அளவு மாறுபடும் .

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
சக்கரை 2 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி சக்கரை எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்; ஏன் என்றால் சக்கரை போட்டு அரைத்ததும் ரொம்ப தண்ணியாக இருக்கும் .
எனவே கொஞ்சம் நெய் விட்டு நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

பால் போளி 2

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1/2 கப்
முந்திரி 1/2 கப்
பிஸ்தா 1/2 கப்
கோவா 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 12 -15 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
பருப்புகளை சன்னமாக உடைக்கவும்.
ஏலப்பொடி, கோவா போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி ,குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
ஒவ்வொரு பூரி இன் உள்ளும், பூரணத்தை வைத்து மூடவும்.
போளி போல பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை இல் வைத்து தடவும் .
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இதை சூடாவும், ஃபிரிஜ் இல் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
பரிமாறும் போது, மேலே பாதாம் பிஸ்தா தூவி பரிமாறலாம். புன்னகை

பால் போளி

இதை பல முறைகளில் செயலாம். சுவை கூடும், ரிச் ஆகவும் இருக்கும். சில முறைகளை பார்க்கலாம்.

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1 கப்
முந்திரி 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 10 -12 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
15 நிமிஷம் ஊரவைக்கவும்.
பாதாமை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும்
முந்திரியை யும் வெந்நீரில் போட்டு வைக்கவும் .
இரண்டையும் துளி பால் விட்டு மசிய அரைக்கவும் .
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும், அறைத்துவைத்துள்ள விழுதை போட்டு கலக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்த தும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்ல இருக்கும்.

குறிப்பு: பாதாம் முந்தி ரி இல்லாமலும், வெறுமன கொதிக்கும் பாலில் பூரிகளை போட்டு சாப்பிடலாம் அதுவும் நல்லா தான் இருக்கும்.

பருப்பு போளி

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் 1 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

தேங்காய் போளி

போளி இல் நிறைய வகைகள் இருக்கு என்றாலும், சாதாரணமாய் , ஆண்டாண்டு காலமாய் நாம் செய்து வருவது தேங்காய் போளி மற்றும் கடலை பருப்பு போளிகள் தான். போகி, வரலக்ஷ்மி விரதம் , மாவிளக்கு போடும்போது, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் இதை தான் செய்வது வழக்கம் புன்னகை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

'கமர் கட்'

இந்த கால குழந்தைகளுக்கு இந்த 'கமர் கட்' பற்றி தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்பெர்ரி இஸ் இல்லாத காலத்தில் ரொம்ப 'மவுசுடன்' இருந்த இனிப்பு புன்னகை சாக்கலேட் என்று கூட சொல்லலாம். இனி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாகு வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 4 - 5 ஸ்பூன்

செய்முறை :

ஒரு தாம்பாளத்தில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
வெல்லத்தை நறுக்கி - தூளாக்கி தண்ணீரில் போட்டு கரைய விடவும்.
வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்
அது கெட்டியாகும் பொது, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
கையால் உருட்டி பார்த்தால் உருட்ட வரணும்.
அதை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பார்த்தால், நல்ல 'வெண்கல சத்தம்' வரணும்.
'டங்கு' என்று சத்தம் வரணும்.
அப்படி வந்து விட்டால் சரியான படம் என்று அர்த்தம்.
உடனே அடுப்பை நல்ல சின்ன தாக்கி விட்டு, தேங்காய் துருவல் மர்ற்றும் ஏலப்பொடி போட்டு நல்லா கிளறி இறக்கிடனும்.
பாகை கரண்டி கரண்டியா க எடுத்து ,தாம்பாளத்தில் உள்ள அரிசி மாவின் மேல் விடணும்.
உடனே சூட்டுடன் உருட்டனும்.
உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ விரும்பியவாறு உருட்டலாம் புன்னகை
அரிசி மாவு அதன் மேல் நல்லா ஒட்டிக்கொண்டு விட்டால் இந்த 'கமர் கட்' ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வேண்டுமானால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
அல்லது அலுமினிய ஃபாய்ல் களில் சுற்றி வைக்கலாம்.
நிச்சயம் குழந்தைகள் என் உங்களுக்கும் பிடிக்கும்.
செய்து பாருங்கள்.புன்னகை

பொரி மாவு உருண்டை 2

தேவையானவை:

புழுங்கல் அரிசி 1 கப்
பொட்டு கடலை 1/2 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம் புன்னகை

பொறி மாவு

தேவையானவை:

கோதுமை மாவு அல்லது அரிசி மாவு 1 கப்
சர்க்கரை 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை/ அரிசி மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , இறக்கவும்.
குழந்தைகளுக்கு இந்த பொடியை கப் இல் போட்டு சாப்பிட கொடுக்கவும்.

பொரி மாவு உருண்டை

தேவையானவை:
புழுங்கல் அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவு, தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.தேங்காய் துறுவலுக்கு பதில் பல்லு பல்லாக நறுக்கி யும் போடலாம்

கோதுமை வெல்ல உருண்டை

இதை எங்க விட்டுல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் புன்னகை சின்ன வயதில் எங்க அம்மா மற்றும் பாட்டி செய்தது.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
அதற்குள் வெந்து விடும் புன்னகை
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.

அவல் சக்கரை

தேவையானவை:

கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.

குறிப்பு: இது குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது புன்னகை

தேங்காய் பால் எடுப்பது எப்படி?

தேங்காய்யை துருவிக்கொண்டு, மிக்ஸில போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கணும் .
ஒரு பெரிய பாத்திரத்தில் சலடையை வைத்து கொள்ளுங்கள், அதில் அரைத்தத்தை ஊற்றவும்
கையால் நன்கு பிழியவும்
இது முதல் பால், நல்ல 'திக்'ஆக இருக்கும்
மீண்டும் சக்கையை மிக்சி இல் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும்
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 2 வது பால்.
ஒருவேளை இதுவும் 'திக்' என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சக்கையை சக்கையை மிக்சி இல் போட்டு கூட 1 ஸ்பூன் அரிசி மாவு அல்லது அரிசி போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 3 வது பால்.
இதைக்கொண்டு எந்த பண்டம் செய்வதானாலும் முதலில் 3வது மற்றும் 2வது பாலை உபயோகப்படுத்தணும்.
பாயாசம் செய்வதானால் முதலில் 3,2 வது பாலை அடுப்பில் ஏற்றி கொதிக்கும் போது சக்கரை போட்டு கரைந்ததும், ஏலப்பொடி முதல் பால் இரண்டியும் விட்டு ஒரு கொதி வந்த தூம் இறக்கிடனும். அற்புதமான 'தேங்காய் பால் பாயசம்' ரெடி புன்னகை

பால் கொழுக்கட்டை

இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள் புன்னகை

தேவையானவை:

அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம் புன்னகை

இனிப்பு சிற்றுண்டிகள்

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்.

Blog Archive