Tuesday, August 30, 2011

பால் கொழுக்கட்டை

இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள் புன்னகை

தேவையானவை:

அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம் புன்னகை

No comments:

Blog Archive