Tuesday, August 30, 2011

பருப்பு சக்கரை போளி

சிலருக்கு வெல்லம் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளது, அவர்கள் வெல்லத்துக்கு பதில் சக்கரை போட்டு செயலாம். ஆனால் அளவு மாறுபடும் .

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
சக்கரை 2 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி சக்கரை எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்; ஏன் என்றால் சக்கரை போட்டு அரைத்ததும் ரொம்ப தண்ணியாக இருக்கும் .
எனவே கொஞ்சம் நெய் விட்டு நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

No comments:

Blog Archive