Monday, July 25, 2011

கத்தரிக்காய் எப்படி வாங்குவது ?

அதன் பாவாடை நல்ல பச்சை யாக இருக்கணும். வாடி இருந்தால் அது பழசு. அதை வாங்குவதை தவிர்க்கணும் . பூச்சி இல்லாததாக
பார்த்து எடுக்கணும். காயை தொட்டால் , மெல்ல அமுத்தினால் மெத் என் இருக்கணும். அழுத்தமாக இருந்தால் அதில் விதை இருக்கும் என் அர்த்தம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
அத வாங்காதிங்கோ, சுடும் போது வெடிக்கும் .

பாதுகாப்பது எப்படி?: கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காம்பை நறுக்கிவிட்டு வைக்கலாம் . முதலில் இந்த காயை பயன் படுத்திவிடுவது தான் நல்லது. வெகு நாட்கள் தாங்காது.

புடலங்காய் எப்படி வாங்குவது ?

விரல்களால் அழுத்தி பார்க்கணும். "மெத்" என் இருந்தால் புதுசு. கடினமாக இருந்தால் முற்றினது, பழசு. ஃபிரெஷ் புடல் என்றால் நல்ல வாசம் வரும்.

எப்படி பாதுகாப்பது?: முனையும்
காம்பும் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .

முருங்கைக்காய் எப்படி வாங்குவது ?

இளசாக வேண்டும் என்றால், காய் இன் ஒருமுனையை ஒருகையாலும், மறுமுனையை மறு கையாலும் பிடித்துக்கொண்டு , லேசாக முறுக்கி (twist) பார்க்கணும். நன்கு வளைந்தால் இளசு. முற்றியதானால் வளயாது.ஆனால் தொக்கு கிளற, கூட்டு செய்ய முற்றியது தேவைப்படும் , அப்ப அதை எடுத்துக்கலாம்

எப்படி பாதுகாப்பது?: முனையும் காம்பும் நறுக்கி வைக்கலாம் அல்லது சாம்பாரில் போடுவதற்க்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .

வெண்டைக்காய் வாங்குவது எப்படி?

கை இல் தொட்டால் கெட்டியாக அதே சமயம் பச்சை யாக இருக்கணும். முன்பு காம்பை ஒடித்து வாங்குவார்கள் இப்ப முடியாது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

பாதுகாப் பது எப்படி?: ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி
தண்ணீரில் போடக்கூடாது. காம்பை நறுக்கி வைப்பதால் காய் முற்றாமல் இருக்கும்.

பாகற்காய் எப்படி வாங்குவது?

பச்சையாக இருக்கணும். தொட்டுப் பார்க்க கெட்டியாக இருக்கணும். வாடிவதங்கி இருக்க கூடாது. அதேசமயம் கெட்டியாக புடைத்துக்கொண்டு விதைகள் தெறிக்கவும் இருக்க கூடாது. வெளி இல் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு குறைவாக உள்ளதாக பார்க்கணும். அப்ப கசப்பு குறைவானதாக இருக்கும். கெட்டியாக அதேசமயம் உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. ரொம்ப பச்சை யாக இருப்பதும் நல்ல கசப்பாக இருக்கும்.

பாதுகாப்பது எப்படி?: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். இல்லை ஒரு 4 , 5 நாட்கள் வாக்கணும் எனில் கம்புகளை நறுக்கி வையுங்கள் .அப்போது பழுக்காது. அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் சிறந்தது

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுப்பது எப்படி?

கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். அமுந்தக்கூடாது . தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகதுவங்கி இருக்கு என் அர்த்தம் அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால், அலம்பாமல் அப்படியே வைய்யவும். ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல் எப்படி?: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரீஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும். உருளை வெங்காயம் போல் காற்றாட வைக்கலாம். அல்லது கொஞ்சம் மண்ணை போட்டு அதில் வைக்கலாம் .

பீட்ரூட் வாங்குவது எப்படி?

நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் தோல் மிருதுவாக, உருண்டையாக, அதன்மேல் வெடிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். பீட்ரூட் வாங்கும் போது இலைகளோடு வாங்குங்கள். இதில் நிறைய சத்துகள் உள்ளன. கீரையாக சமைத்து சாப்பிடலாம். சின்ன காயை வாங்குங்கள். பெரியதாக இருந்தால் முற்றல் அதிகம் இருக்கும். இலைகளை சாப்பிட வேண்டுமானால் இளசாக கரும்பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும்.

பாதுகாப்பது எப்படி? : ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். காயை பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரிஜ் இல் 1 வாரம் கூட வைக்கலாம்.

காலிஃபிளவர் தேர்ந்தெடுப்பது எப்படி?

தேர்ந்தெடுப்பது எப்படி?: நல்ல வெள்ளை நிறத்தில் அதை ஒட்டியுள்ள இலை பசுமையாக இருக்க வேண்டும். பூவின் அளவு பெரிதாகவோ சிறியதாகவோ இருக்கலாம். சிலவற்றில் சிறிய பூக்களுக்கு இடையில் இலைகள் வளர்ந்து இருக்கும் இதனால் எந்தக் கெடுதலும் இல்லை. இலையை நீக்கிவிட்டு உபயோகிக்கலாம். தண்டு நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும். மொட்டிலேயே உள்ளே போய் இதன் சத்தை சாப்பிட்டு வளரும். பார்க்க சட்டென்று தெரியாது.கூர்ந்து பார்த்தால் புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கறுப்பு புள்ளிகள் இருக்கும். ஜாக்கிரதை புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

அப்படியே வாங்கி வந்து விட்டாலும் புழு இருக்கும் பகுதியை நீக்கி விட்டு உபயோகிக்கலாம். சமைப்பதற்கு முன்
பூவை நறுக்கி உப்பு கலந்த வெதுவெது ப்பான நீரில் போட்டு எடுக்கவும். புழுகள் இறந்து வெளியே வந்துவிடும். பூக்கள் மஞ்சளாக இருந்தால் பழசு என்று அர்த்தம்.

பாதுகாப்பது எப்படி?: வெளி இலேயே ஒரு நாள் - 2 நாள் வைக்கலாம் . ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது பிளாஸ்டிக் பைகளில் வைக்கக்கூடாது.துணிப்பைகளில் வைக்கலாம் . அடியிலுள்ள கிரிஸ்பரில் வைக்கவும். அதுவும் தண்டுப் பகுதி மேல் பக்கமாக இருக்குமாறு வைத்தால் ஈரம் பூவின் மேல் தங்காது. ஃபிரெஷ் ஆக இருக்கும்.

முழு உளுந்து பொங்கல்

தேவையானவை:

முழு உளுந்து - 1/2 கப்
பச்சரிசி -1 கப்
இஞ்சி (நறுக்கியது) - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
இதுவும் பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.

உளுத்தங்களி 3

தேவையானவை:

சிகப்பு அரிசி 2 கப் - வறுத்து அரைக்கவும்
உளுத்தம் பருப்பு - 3 /4 கப் - - வறுத்து அரைக்கவும்
பயற்றம் பருப்பு - 1 /2 கப் - வறுத்து அரைக்கவும்
சர்க்கரை - 2 கப்
நெய் - கொஞ்சம்
ஏலப்பொடி - கொஞ்சம்
தேங்காய் பால் - 1 கப்

செய்முறை:

உருளியில் தேங்காய்பால், சர்க்கரை ஏலப்பொடி போட்டு ஒரு கொதி விடவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு , எல்லா மாவையும் போட்டு நெய் விட்டு
கிளறவும்.
நன்றாக 'பந்து' போல் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: பூப்பெய்தும் பெண்குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி சாப்பிட கொடுப்பது வழக்கம் உளுத்தங்களியில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம்,வைட்டமின் ஆகிய பலசத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் உளுத்தங்களியை கொடுப்பதால் அவர்களின் இடுப்பெலும்பு கள் வலுவாகும்.

உளுத்தங்களி 2

தேவையானவை:

முழு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - 5,
தேங்காய் - 1 மூடி,
நெய் - 4 ஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை துருவி 2 டம்ளர் பால் எடுக்கவும். தேங்காய் பாலை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
சர்க்கரை கரைந்தவுடன் உளுத்தம் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவி நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் போல் வரும் போது இறக்கவும்.
சுவையான உளுத்தங்களி தயார்.

உளுத்தங்களி

உளுத்தங்களி, உளுத்தங்க கஞ்சி எல்லாமே குருக்க்கு (இடுப்புக்கு நல்லது)
உளுந்து சுண்டல், உளுந்து வடையும் சாப்பிடலாம்.

தேவையானவை:

தோலுடைய முழு உளுத்தம் பருப்பு - 1 1/4 கப்
பனை வெல்லம் - 200 கிராம்
நெய் 100 கிராம்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்

செய்முறை:

உளுந்தை சிவக்க வறுத்து நன்கு பவுடராக அரைத்து சலித்து கொள்ளவும். ஒரு உருளியில் தண்ணீர் ஊற்றி பனை வெல்லத்தை இடித்து கரைத்து தெளிய வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் உளுந்து மாவில் கலந்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சுருண்டுவரும் பதம் வந்ததும் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிலர் நல்லெண்ணெய் விட்டும் செய்வார்கள்.

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..2

கோடை இல் நிறைய பேர் அவதிப்படுவது நீர்சுருக்கு எனப்படும் நோயால். அதாவது
சிறுநீர் வரும் போல் இருக்கும் ஆனால் நன்றாக பெருகி வராது . அதற்க்கு கைகண்ட மருந்து இதோ . ஒரு மிளகு அளவு சுண்ணாம்பை ( நாம் வெற்றலை போட உபயோகிப்ப்மே அது தான் ) எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கரைத்து குடித்துவிடவும் , சில நிமிடங்களிலேயே உங்கள் தொல்லை போயே போச்.

கோடை இல் சரும வியாதிகள் வர்ரமல் தடுக்க , ஒரு கை வேப்பிலையை (சுத்தம் செய்து ) ஒரு பக்கெட் தண்ணீரில் இரவே போடவும். காலை இல் அந்த தண்ணீரில் குளிக்கவும்.

வியர்வை யால் வரும் துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் சில துளி "யூடிகலோன் " அல்லது சில சொத்துகள் எலுமிச்சை சாறு கலக்கலாம்.

வியர்க்குரு வந்து விட்டால் அதன்மேல் தண்ணியாக கரைத்த சந்தனம் பூசலாம் அல்லது நுங்கின் உள்ளிருக்கும் நீரை தடவலாம் .

உடல் குளுமைக்கு வெட்டிவேர் போட்ட நீரை வறுகலாம். வெட்டிவேரை ஒரு வெள்ளை துணி இல் முடிந்து பானை நீரில் போடவும். தண்ணீரும் நல்ல மணமாக இருக்கும், உடலுக்கும் நல்லது + குளுமை.

வீட்டு ஜன்னல் மற்றும் வாசல் படிகளில் வெட்டிவேர் தட்டிகளை போடலாம். அதில் தண்ணீர் தெளித்தால், நல்ல மனமாகவும் வீடு குளுமயாகவும் இருக்கும்.

ரொம்ப உடல் சூட்டால் அவதி படுபவர்கள் தலைக்கு விளக்கெண்ணை கூட வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சோம்பு ஜலம் வைத்து சாப்பிடலாம்

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..

வெயீல் கொளுத்துகிறது; அதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.

மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.

நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர் புன்னகை

உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.

தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.

கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.

இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.

அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.

கறைகளை நீக்குவதற்க்கு முன்

கறை பட்டவுடன் கழுவினால் கறைகள் மறைந்துவிடும். ஆனால் பல சமயங்களில் கறைகளை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இதற்குத் தனி கவனம் தேவைப்படுகிறது.

கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.

கறைகளை நீக்குவதற்கு முன்:

மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.

உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.

டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.

உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.

கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.

ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.

சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.

தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.

உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.

உடைகளின் சாயம் மாறுமா?

உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அய‌ர்‌ன் ப‌ண்ணவு‌ம். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.

சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?

ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.

உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.

கறைகளை நீக்க

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.

சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

பிரட் ஹல்வா 2

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
மில்க் மெய்டு 1/2 டின்
நெய் 1 – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 – 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
பூந்துருவலாக வரும்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான ‘பிரட் ஹல்வா’ நிமிடத்தில் தயார்.

குறிப்பு: மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்

பிரட் சக்கரை தூவினது

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல ‘மெத்’ என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

மிளகு ரசம்

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.

தேவையானவை:

ரசப்பொடி 1 – 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும் ,சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">

மிளகு டீ

மிளகு டீ – இது ரொம்ப சுலபம்.

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் உடைத்த மிளகு
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து மிளகை போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
இதை குடித்ததுமே உங்கள் “தலைகனம்” இறங்குவதை உணரலாம்.
முக்கடைப்பும் குறையும்.
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் மிளகு போடுவதால் சில சமயம் திரிய வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.


பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும், அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 – 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்

சூட்டில் சளி

முதலில் எப்படி கண்டுபிடிப்பது ? கண்ணு எரியும், தொண்டை கர கரக்கும், தலை இல் எண்ணை வைத்து அழுந்த தேத்தால சூடு பறக்கும், வறட்டு இருமல் இருக்கும்,
சில சமையம் அடி வயிறு வலிக்கும், ‘ஒன்றுக்கு’ போனால் எரியும் அல்லது கொஞ்சமாக நீர் கடுப்புபோல் அளவு குறைவாக போகும்

அப்படி இருந்தால், செய்ய வேண்டியவை, நல்ல எண்ணை தேய்த்து குளிக்கணும், நிறைய மோர் குடிக்கணும், தயிர் சாதம் நரத்தங்கை தொட்டுண்டு சாப்பிடணும், இஞ்சி டீ குடிக்கலாம், சோம்பு ஜலம் குடிக்கலாம், பனங்கல்கண்டு ஜலம் குடிக்கலாம்,
பனம் வெல்லத்தில் ஏதாவது பண்ணி சாப்பிடலாம். ஆக மொத்தத்தில் குளுமைக்கு சாப்பிடணும்.

எல்லாத்தைவிட ரொம்ப ரொம்ப சிறந்த து, வாழைப்பழ மில்க் ஷேக் அது குடித்தால் ஒரே வேளை இல் சரியாகிவிடும்.

சேர்க்க வேண்டிய காய்கறிகள், பூசணி, சௌ சௌ , பரங்கி, சூறை போன்ற நீர் காய்கறிகள், வெந்தயம் , வெந்தய கீரை, பசும்பால் போன்றவை .

குளுமையால சளி என்றால்….

முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

இதுக்கு ரூல் என்ன வென்றால், “சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் “லங்கனம் பரம ஔஷதம் “ அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்” என்பா என் பாட்டி .

நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் – இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> )

ராயல் மிக்ஸர்

தேவையானவை :

500 gms கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) plain
150 gms முந்தரி பருப்பு
150gms பாதாம்
100gms உலர் திராக்ஷை
1sp சர்க்கரை
1sp மிளகாய் பொடி
1 /2sp உப்பு
கறிவேப்பிலை கொஞ்சம்
1 தேக்கரண்டி எண்ணை

செய்முறை:

பாதாமை தண்ணிரில் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

முந்திரியை சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்.

ஊரிய பாதாமை தோல் உரித்து, சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்

கறிவேப்பிலை, உலர் திராக்ஷை யை அலம்பி துடைக்கவும்.

அடுப்பை பற்றவைக்கவும் .

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, முந்தரி பருப்பு, பாதாம், கறிவேப்பிலை, உலர் திராக்ஷை எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.

தீயை குறைத்து கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) போடவும். நன்கு வறுக்கவும்.

அடுப்பை அணைக்கவும்.

இப்பொழுது உப்பு, சர்க்கரை,மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

‘ராயல் மிக்ஸ்ர்’ ரெடி.

Blog Archive