Monday, July 25, 2011

பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும், அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 – 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்

No comments:

Blog Archive