Monday, June 22, 2015

'ப்ளைன் நான்' + 'பட்டர் நான்'

வட இந்திய உணவுகளில் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் இது .................இதை செய்ய முட்டை வேண்டும்...................... தந்துரி அடுப்பு வேண்டும்............... அது இது என்று ரொம்ப சொல்வார்கள்................ஆனால் நம்ப வேண்டாம்       இது ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடியது.......நிஜம் தான்......................நாம் சாதாரணமாக செய்யும் ரொட்டியை விட இதை சுலபமாக செய்யலாம்..........நான் அப்படித்தான் 'நான்' செய்தேன்...................நீங்களும் செய்து பார்க்கலாம் 

தேவையானவை :

மைதா 2 கப்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 1 டீ ஸ்பூன் ( நன்கு பொடிக்கவும் )
உப்பு 1/2 ஸ்பூன்
பேகிங் சோடா 1/2 ஸ்பூன்
தயிர் 1/4 கப் ( குழப்பி வைக்கவும் )

செய்முறை:

மைதாவை பேக்கிங் சோடா போட்டு சலிக்கவும்.
அதில் நடுவில் குழி செய்து எண்ணெய், சர்க்கரை, உப்பு எல்லாம் போட்டு கலக்கவும்.
இப்போ குழப்பி வைத்துள்ள தயிரை அதில் விடவும்.
மாவை மிருதுவாக பிசையவும்.
அநேகமாய் தண்ணிரே வேண்டி இருக்காது.
இந்த மாவை சுமார் 6 - 7 நிமிடங்கள் தொடர்ந்து ( கடிகாரத்தை பார்த்து கொண்டு ) பிசையவேண்டும்.
அப்படி பிசைந்த மாவை சுமார் 4 மணி நேரம் ஊர வைக்கவும்.
இந்த நேரம் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான்  .............குளிர் பிரதேசம் என்றால் 12 மணி நேரம் கூட வைக்கலாம்.
அல்லது இரவே மாவு பிசைந்து வைத்து விட்டு காலை செய்யலாம்..............சரியா?
ஸோ, இப்போ மாவு தயார்.
மேலே சொன்ன அளவிற்கு சுமார் 8 வட்டமான 'நான்கள்' வரும்.
வட்டமாக இடாமல் 'ஓவல்' ஆக கூட இடலாம்.............. ஆனால் அப்படி செய்தால் கல்லில் இருந்து விழுந்து விடுகிறது .................எனவே தான் வட்டம்  
மொத்த மாவையும் 8 சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துகொள்ளவும்.
மாவை நல்ல கனமான சப்பாத்தி போல வட்டமாக இடவும்.
கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, அதை சப்பாத்தி போல இட்டு வைத்திருக்கும் பகுதி இல் தடவவும்.
கைப்பிடி உள்ள தோசைக்கல்லில் ஈரமான பகுதி படும்படி 'நானை' போடவும்.
ஒரே நிமிடத்தில் அதில் கொப்புளங்கள் போல வரும், அந்த நேரத்தில் மெல்ல தோசைக்கல்லை எடுத்து அடுப்பிற்கு நேரே காட்டவும்.
கண்டிப்பாக 'நான்' அடுப்பில் விழாது................கொஞ்சம் சாய்த்து சாய்த்து முழுவதும் நெருப்பில்  காட்டவும்.
அது வெந்ததும், மெல்ல தோசைக்கல்லை பழயபடி அடுப்பில் வைத்து விட்டு, அடுப்பை சின்னதாக்கவும்.
இப்போது தோசைக்கல்லில் இருந்து 'நானை' எடுக்கவும்.
உங்களுக்கு பிடித்த 'சைட் டிஷ்' உடன் பரிமாறுங்கள்.
அவ்வளவுதான் சூப்பர்...........மெத் மெத் என்கிற 'ப்ளைன் நான்' ரெடி.


'பட்டர் நான்' வேண்டும் என்றால்....................எடுத்த சூடான நானில் கொஞ்சம் வெண்ணையை தடவி பரிமாறவும்........அவ்வளவு தான்.  


குறிப்பு : ஒருவேளை................ஒருவேளை..................'நான்' விழுந்து விட்டால் அடுத்த முறை நிறைய ஈரம் இருக்கும்படி தண்ணீர் தடவவும்.

No comments:

Blog Archive