Tuesday, July 22, 2014

கொத்துமல்லி சப்பாத்தி

இனி சில வகை சப்பாத்திகளின் செய்முறைகளை பார்ப்போம் புன்னகை

தேவையானவை :

கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து கொள்ளவும்)
கோதுமை மாவு 2 கப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 8 - 10 
பூண்டு 4 - 5 பற்கள் ( தேவையானால் )
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி (தேவையானால் )
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
எண்ணெய் + நெய் கலவை சப்பாத்தி செய்ய 

செய்முறை :

கொத்துமல்லியை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின கொத்துமல்லி, பச்சை மிளகாய்,மிளகாய் பொடி,பெருங்கயப்பொடி மற்றும் பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு கலக்கவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் + நெய் கலவை விட்டு எடுக்கவும்..
சுவையான பச்சை நிறமான கொத்துமல்லி சப்பாத்தி தயார் புன்னகை

குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி புன்னகைவேண்டுமானால் கொத்துமல்லி , பூண்டு, மிளகாய் எல்லாவற்றையும் மிக்சி இல் அரைத்ததும் கலக்கலாம்.

No comments:

Blog Archive