Tuesday, July 22, 2014

முந்திரி பகோடா

தேவையானவை:

அரிசி மாவு 1 1/4 கப்
கடலை மாவு 1 கப்
முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
வெங்காயம் 1 பெரியது 
மிளகாய் பொடி 2 ஸ்பூன் 
ஒரு சிட்டிகை சோடா உப்பு 
உப்பு
நெய் 2 ஸ்பூன்
பொறிக்க எண்ணை
கறிவேப்பிலை சிறிதளவு 

செய்முறை:

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும் 
ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
'முந்திரி பக்கோடா' ரெடி புன்னகை 

No comments:

Blog Archive