Wednesday, August 17, 2011

சில முன்னேற்பாடுகள் அல்லது டிப்ஸ்

சில முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பக்ஷணங்களை சுலபமாக டென்ஷன் இல்லாமல் செயலாம் புன்னகை

வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் புன்னகை அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது புன்னகை

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா? புன்னகை

எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.

1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் ‘டாங்கர்’ பச்சடி’ செயல்லாம்.

நமக்கு இது எல்லா பாயாசம், சக்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் என எல்லாவற்றிக்கும் தேவை. எனவே இதை மொத்தமாக பொடித்து வைப்பது நலம்.

ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்காவின் தோலும் உபயோகப்படும்.

கோலம் போட 1/2 அரிசி யை நனைத்து வையுங்கள். சீடை பொறியும் போது ஒரு பக்கம் அரைத்து விடலாம்.

தேங்காய் யை உடைத்து 1 மூடி துருவவும். 1 மூடியை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும். சுய்யனுக்கும் துருவி வைக்கணும்.

இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்

No comments:

Blog Archive