Friday, July 22, 2011

அதிரசம்

இது கால்ம் காலமாய் நாம் செய்து வரும் இனிப்பு. தெற்க்கு பக்கத்தில் இது இல்லாம்ல் தீபாவளி கிடையாது :) தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் நோன்புக்காக செய்வது இந்த இனிப்பு. கொஞ்சம் மெக்கெடனும் ஆனால் ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை:

பச்சரிசி 1/2 கிலோ
வெல்லம் 1/4 கிலோ
எண்ணை - பொறிக்க
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை கல் குப்பை நீக்கி, களைந்து உலர்த்தனும்.
ஒரு 3 மணி நேரம் காயனும்.
ரொம்பவும் காய கூடாது, கொஞ்சம் ஈரமாக இருக்கும் போதே மிக்ஸில மாவாக அரைக்கணும்.
நன்கு சலிக்கவும்.
வெல்லத்தை எடுத்து உடைத்து 3/4 கப் தண்ணீரில் போடவும் .
அது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் முன், வடி கட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லாவிடில் பொங்கிவிடும்.
பாகு கொஞ்சம் கெட்டியாக துவங்கும் போது, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணி எடுத்து வைத்துக்கொண்டு, இந்த பாகிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அதில் விடவும்.
உங்கள் கைவிரல்களால், பாகை உருட்ட முடிந்தால் சரியான பதம் என பொருள்.
இல்லாவிட்டால் இன்னும் கொதிக்கணும் என பொருள் . சரியா?
பதம் சரி என பட்டதும் அடுப்பை சின்னதாக்கி விட்டு, ஏலப்பொடி போடவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு பெரிய பேசினில், அரிசி மாவை போடவும் .
இந்த பாகிலிருந்து ஒரு கரண்டி அதில் விடவும்.
அதை கலக்கவும்.
மீண்டும் மாவில் பாகை விடவும் , கலக்கவும்.
இதற்க்கு "பாகு செலுத்துதல்" என்று பெயர்.
[b]மாவில் பாகை கொஞ்சம் கொஞ்சமாக போடணும் பாகில் மாவை கொட்டக்கூடாது[/b]
[color=red][/color]
இப்படி யாக கெட்டியான அதிரச மாவை தயாரிக்கணும்.
கொஞ்சம் பாகு மீந்து போனால் பரவாயில்லை, பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.
அதிரசமாவை நன்கு பிசைந்து வைத்துவிடவும்
2 நாள் கழித்து கூட அதிரசம் பண்ணலாம்.
மாவு ஒன்றும் ஆகாது.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு இந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து அதிரசம் தட்டி எண்ணை இல் போடவும்.
அடுப்பு நிதானமாய் எரியவேண்டும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடணும்.
வெளியே எடுத்து மற்றும் ஒரு கரண்டியால் அதிரசத்தை நன்கு அழுத்தி எண்ணையை வடித்துவிட்டு தட்டில் போடணும்.
அவ்வளவுதான் சுவையான அதிரசம் தயார்

[b]குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை சேர்த்து செய்வார்கள் .[/b]

No comments:

Blog Archive