Monday, December 12, 2011

புழுங்கல் அரிசி கஞ்சி

புழுங்கல் அரிசி கஞ்சி: இது ரொம்ப சத்தானது. நாங்க 4 -5 மாதத்திலேயே ஆரம்பிச்சுடுவோம்.

தேவையானவை:

1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
ஒரு பிடி பார்லி
1 ஸ்பூன் சீரகம்.

செய்முறை :

அரிசியை வரட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும் .
நல்லா பொரியனும், ஆனால் கருக கூடாது.
அரிசி நல்லா பொரியும் பொது, பார்லி போட்டு வறுக்கணும்.
அடுப்பை அணைத்துவிட்டு சீரகம் போடணும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆறினதும் மிக்ஸில மாவாக அரைக்கவும்.
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

கஞ்சி செய்யும் போது 1 ஸ்பூன் பொடி எடுத்து ( எதுவுமே முதலில் நீங்க சாப்பிட்டு பார்த்து பின் குழந்தைக்கு தரவும்) 1 டம்பளர் தண்ணீரில் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும், அடிபிடிக்காமல் கிளறவும்.
வேண்டுமானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
தண்ணியாக போட்டு வடிகட்டி பால் கலந்து, சர்க்கரை போட்டு பாட்டிலில் தரவும்.
அப்படியெவும் தரலாம்.
அதாவது பால் இல்லாமலும், தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிக படுத்தலாம்.

7 - 8 மாத குழந்தைக்கு கூழ் போல செய்து ,(முழுங்க முடிந்தால்) 'semi solid' ஆக செய்து ஸ்பூன் இல் தரலாம். .

அதே போல் இதில் துளி உப்பு போட்டு மோர் விட்டும் தரலாம். ரொம்ப சத்தான கஞ்சி இது, நாம் கூட குடிக்கலாம். ஜுரம் போது, இரவு சாப்பிட பிடிக்காமல் இருக்கும் போது இந்த கஞ்சி குடிக்கலாம்

குறிப்பு: பார்லி இருப்பதால் 'ஒன்றுக்கு' நல்லா போகும், புழுங்கல் அரிசி என்பதாலும் சீரகம் இருப்பதாலும் நல்லா ஜெரிச்சுடும்

No comments: