Saturday, September 10, 2011

அடை பிரதமன்

எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் புன்னகை செப்.9 -2011 ஓணம் வருகிறது புன்னகை அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் அன்பு மலர்


அடை பிரதமன் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். நாம் செய்யும் 'பால் கொழுக்கட்டை' போன்றது. கொஞ்சம் செய்முறை வேறு புன்னகை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானவை :

அரிசி 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்

செய்முறை:

அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி , இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பின், நன்கு ஆற விடவும்.
வெந்த மாவை இலை லிருந்து உரித்து எடுத்து ,மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலி இல் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடி செய்து போடவும்.
நன்கு வெந்த தும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
அடைபிரதமன் தயார்.

No comments:

Blog Archive