Tuesday, November 20, 2018

நெல் பொரி உருண்டை

நெல் பொரி உருண்டை

தேவையானவை :

2  கப் நெல் பொரி 
ஒரு கப் துருவிய வெல்லம் 
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி 
கால் கப் தேங்காய்த் துண்டுகள் ( சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) 
அரிசிமாவு கொஞ்சம்

செய்முறை:

நெல் பொரி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

'நெல் உமி 'இருந்தால் தொண்டையில் குத்தும். 

ஒரு வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு துருவிய வெல்லம் போடவும்.

அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகளை போடவும். 

நன்கு கொதித்து கெட்டியாகும்போது ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கொஞ்சமாக விடவும்.

அது உருட்டும் படி வந்தால் சரியான பதம்.

உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.

எடுத்து வைத்துள்ள நெல் பொரியை அதில் கொட்டி நன்கு கிளறவும்.

சூட்டுடன், அரிசி மாவை தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

நெல் பொரி உருண்டை தயார்.

No comments:

Blog Archive