Saturday, July 30, 2011

ஓட்ஸ் பொங்கல்

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
மிளகு சீரகம் பொடித்தது 1 டீ ஸ்பூன்
இஞ்சி மிகவும் பொடியாக நறுக்கினது அல்லது துருவினது 1/2 ஸ்பூன்
வேக வைத்த பயத்தம் பருப்பு 1/2 கப்
நெய் 2 ஸ்பூன்
வேண்டுமானால் முந்திரி
கொஞ்சம் கறிவேப்பிலை
உப்பு
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு ஒட்சை போட்டு நன்கு வறுக்கவும்.
( நல்ல வறுபடவில்லை என்றால் 'கொஞ்சம் ஒட்டிக்கும்' )
இதில் வெந்த பருப்பை கொட்டி வேண்டுமால் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பை சின்ன தாக வைக்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓட்ஸ் வெந்து நன்கு கலந்ததும், உப்பு போட்டு கிளறவும்.
வேறு ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுக்கவும்.
அதிலேயே மிளகு சீரகம், இஞ்சி கறி வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதை அடுப்பில் உள்ள ஓட்ஸ் மற்றும் பருப்பு கலவை இல் கொட்டவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
ஓட்ஸ் பொங்கல் ரெடி.

No comments:

Blog Archive