Saturday, July 30, 2011

ஓட்ஸ் அடை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
சோள மாவு 1/2 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
உப்பு
அடை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, சோள மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும் .
ஒரு பிளாஸ்டிக் கோவரில் அல்லது வாழை இலை இல் எண்ணை தடவி, இந்த மாவில் ஒரு சாத்துகுடி அளவு எடுத்து அடை போல் தடவும்.
உரித்து எடுத்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணை விட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகாய் வேண்டாம் என்பவர்கள் மிளகாய் பொடி போட்டுக்கலாம்; மிளகு சீராக பொடி போடலாம், கரம் மசாலா போடலாம் நம் சுவைக்கு ஏற்ப செயலாம்புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">கறிகாய் கூட காரட் துருவி போடலாம .

No comments:

Blog Archive