Monday, August 1, 2011

பண்டிகை கால டிப்ஸ்

ஆடிமாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகள் தான். ஆடி செவ்வை, ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு , பிறகு ஆவணி அவிட்டம் , கிருஷ்ண ஜெயந்தி , பிள்ளையார் சதுர்த்தி என பட்டியல் நீளும். அதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பண்டிகை அன்று சிரமப்படாமல் சந்தோஷமாக கொண்டாடலாம். அதற்கான டிப்ஸ் தான் கீழுள்ளவைகள்

கோல மாவு :

எப்படியும் இழை கோலம் தான் போடணும், ஒவ்வொரு நாளும் அரிசி ஊறவைத்து அரைத்து , கோலம் போட்டாலும், மீந்து விட்டால் வேஸ்ட் தான் . அதனால் ஒரு 1/2 அல்லது 1 ஆழாக்கு அரிசி யை ஊற வைத்து நன்கு அரைக்கவும் . முதல் நாள் அப்படியே கோலம் போட்டு விடவும். பிறகு அந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, காய வைக்கவும். வெயீல் தான் வேண்டும் என்பது இல்லை. காற்றாட வைத்தாலே காய்ந்து விடும். அவ்வளவுதான், காய்ந்ததும் அதை டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து துளி தண்ணி விட்டு கரைத்து கோலம் போடவும். இழை கோலம் ரொம்ப நல்ல வரும்.

குறிப்பு: கோலம் ரொம்ப வெள்ளை யாக வாரவும், சீக்கிரம் அழியாமலும் இருக்க அரைத்த மாவில் கொஞ்சம் மைதா மாவு சேர்த்து கலந்து கோலம் போடவும்.

No comments: