Thursday, November 15, 2018

மோர் கூட்டு

மோர் கூட்டு

இதுவும் கிட்ட தட்ட அவியல் போலவே இருக்கும். ஆனால் இதை ஒரே காய் போட்டுத்தான் செய்யவேண்டும். இதற்கு வாழைத்தண்டு, பூசணிக்காய் மிகவும் பொருத்தமாய் இருக்கும். சிலர் சௌ சௌ, சுரைக்காய்  மற்றும் முட்டை கோஸிலும் செய்வார்கள். 

தேவையானவை:

பூசணிக்காய் கால் கிலோ 
தயிர் – அரை லிட்டர் 
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி ஒரு சின்ன துண்டு 
உப்பு – 1 ஸ்பூன் 

தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு  ஒரு டீஸ்பூன் 
மஞ்சள் பொடி சிறிது 
செய்முறை:

பூசணிக்காயை தோல் சீவி, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, உப்பு போடவும்.
தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'மோர் கூட்டு ' ரெடி.
சூடு சாதத்தில் நெய் விட்டு இதைப்போட்டு சாப்பிடவும்.
பொரித்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு: ஒருவேளை கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து கரைத்து கூட்டில் விடவும்.
கைவிடாமல் கலக்கவும், இல்லாவிட்டால் கூட்டு அடிபிடித்துவிடும். ஆனால், இதுபோல் செய்யாமல் இருப்பது நன்று. 

No comments:

Blog Archive