Thursday, November 15, 2018

பொரித்த கூட்டு

பொரித்த கூட்டு  ! 

பொரித்த கூட்டு என்றால் புளி இல்லாமல் வெறும் காய்கறிகள் மற்றும் பருப்பை கலந்து செய்வது இதற்கு நீங்கள் பீன்ஸ், புடலங்காய், சௌ சௌ என்கிற பெங்களுர் கத்தரிக்காய், காரட், பீர்க்கங்காய்,சுரைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முட்டைக்கோசு, பருப்பு கீரை, பச்சை பப்பாளி அதாவது பப்பாளிக்காய், முருங்கை பூக்கள், அவரைக்காய் போன்றவற்றை  உபயோகிக்கலாம் .

இந்த கூட்டு செய்ய தேவையானவை:

மேலே சொன்னவற்றில் இருந்து ஏதாவது ஒரு காய் அரை கிலோ 
பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஒரு கப் 
கூட்டுப் பொடி 2 லிருந்து 3 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் 2 லிருந்து 3 டீஸ்பூன் 
பெருங்காய பொடி கால் டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் 
தாளிக்க கடுகு 
தாளிக்க உளுத்தம்பருப்பு 
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் கொத்துமல்லி 

செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தோல் சீவி வேண்டிய காயாக இருந்தால் தோல் சீவி நறுக்கவும். 

கீரையாக இருந்தால் வேர்களை நீக்கி பலமுறை அலம்பி நறுக்கவும்.

நறுக்கிய காய் மற்றும் பருப்பை மற்றும் பருப்பை குக்கரில் வைக்கவும் காய் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும் 3 அல்லது 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு ஆழமான உருளி அல்லது வாணலியில் தாளிக்க எண்ணை எடுத்துக் கொண்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.

கடுகு வெடித்ததும் கருவேப்பிலை போடவும் பிறகு வெந்த பருப்பு மற்றும் காயை அதில் கொட்டவும்.

இப்பொழுது அதில் அதில் கூட்டுப் பொடி, தேங்காய், உப்பு, பெருங்காயப்பொடி எல்லாம் போடவும்.

நன்கு கிளறி விடவும்.

ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.

பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான பொரித்த கூட்டு தயார்.

சுடுசாதத்தில் நெய் விட்டு இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு : உங்களுக்கு தேவையானால் இரண்டு காய்கறிகள் அல்லது 3 காய்கறிகள் கலந்து கூட்டு செய்யலாம். 

No comments:

Blog Archive