Tuesday, July 19, 2011

பிரட் பஜ்ஜி 3

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 2 கப்
சோள மாவு 1/4 cup
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன் (தேவையானால் )
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு, சோள மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
சோள மாவு சேர்ப்பதால் இது ரொம்ப 'கிறிஸ்ப் 'ஆக இருக்கும் அதாவது ரொம்ப மொரு மொருப்பாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: உங்களுக்கு இந்த பஜ்ஜிகள் இன்னும் காரமாக வேண்டுமானால் , பிரட் துண்டங்கள் மேல் துளி மிளகாய் பொடி உப்பு கலவையை தடவி பின் மாவில் முக்கி பஜ்ஜி போடுங்கள் . சரியா?

No comments:

Blog Archive