Tuesday, July 19, 2011

திரட்டுப்பால்

இதில் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

No comments:

Blog Archive