Tuesday, July 19, 2011

பிரெட் கோஃப்தா

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 10
பால் - கொஞ்சம்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2(இரண்டையும் பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரிக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்)அல்லது டொம்டோ பியூரி உபயோகிக்கவும்.
மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

செய்முறை:

பாலில் பிரெட்டை நனைத்து வேக வைத்த உருளைகிழங்கு உப்புடன் பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வாணலி இல் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய் பொடி , கரம்மசாலா பொடி , போட்டு கொதிக்கவிடவும்.
நான்கு கொதித்து வாசனை போனதும் இறக்கிவிடவும்.
வேண்டுமானால் கொத்தமல்லி தழை போடலாம்.
பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

No comments:

Blog Archive