Tuesday, July 19, 2011

பிரெட் புட்டு

தேவையானவை:

பிரட் ஸ்லைஸ் 10 -12
கடலை பருப்பு 5 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 -12
பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் பருப்புகளை 1/2 மணி ஊற வையுங்கோ
பிரட் ஐ மிசில போட்டு பூந்துருவலாக துருவி எடுத்து வையுங்கோ .
ஊறிய பருப்புகள் மற்றும் மிளகாய் வற்றல் கொஞ்சம் கறிவேப்பிலை உப்பு போட்டு நன்கு மசிய அரையுங்கோ
தண்ணி மட்டா விட்டு அரையுங்கோ.
அரைத்த விழுதை இட்டலி போல் ஆவி ல வேகவையுங்கோ
வெளி இல் எடுத்து அறினதும் உதிர்த்து வையுங்கோ.
ஓர் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பெருங்காய பொடி போட்டு , உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு நன்கு கிளருங்கோ.
2 நிமிஷம் அப்படியே நன்கு கிளருங்கோ.
இப்ப பிரட் துருவலை போட்டு கிளருங்கோ.
எல்லாமா ஒண்ணா சேர்ந்ததும் இறக்கிடுங்கோ
பிரெட் புட்டு தயார், எந்த சட்டினியுடனும் நன்னா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் நீங்க இதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

No comments:

Blog Archive