Tuesday, July 19, 2011

பிரெட் ரோல்ஸ் தக்காளி கிரேவியுடன்

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ்
வேக வைத்த உருளை கிழங்கு 3 (உதிர்த்து வைக்கவும் )
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கி வைக்கவும் )
பச்சை மிளகாய் 10
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு சீரகம் தாளிக்கணும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்
பிறகு வெங்காயத்தை போடணும்.
பிறகு உருளைக்கிழங்கை போடணும்.
எல்லாவற்றையும் நன்கு கிளறனும்.
உப்பு மிளகாய் பொடி போட்டு மறுபடி கிளர்னும்.
உப்பு உறைப்பு சரி பார்த்து இறக்கிடணும்
வேண்டுமானால் கொத்துமல்லி தூவலாம்.
அறினதும் சின்ன சின்ன உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு சுடவைக்கணும்.
பிரட் இன் ஓரங்களை கட் செய்து விட்டு தயாராய் வைத்துக்கொள்ளவும்
ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு தண்ணீரில் முக்கவும் , இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி தண்ணீரை பிழியவும்.
பிறகு அந்த பிரெட் நடுவே ஒரு உருளை கறி உருண்டையை வைத்து, பிரெட் ஆலேயே மூடணும்.
பிறகு நல்லா உருட்டி எண்ணை ல போடணும்.
நல்ல பொன்னிறமானதும் எடுத்துடனும்.
இவ்வாறு எல்லா பிரெட் ஐயும் செய்யனும்.
வெஜிடேபிள் போண்டா போலவே ரொம்ப நல்லா இருக்கும்.
மேலே பகுதி ரொம்ப கர கர ப்பாகவும் உள்ளே மெத் என்றும் இருக்கும்.
பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.

தக்காளி கிரேவி செய்யும் முறை :

தேவையானவை:

தக்காளி 1/2 கிலோ
வெங்காயம் 1/4 கிலோ
பச்சை மிளகாய் 10
பூண்டு 4 -6 பல்
இஞ்சி ஒரு துண்டு
உப்பு
கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
வேண்டுமானால் 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
நெய் 2 - 3 ஸ்பூன்

செய்முறை :

பூண்டு வெங்காயம் இஞ்சி இவைகளை விழுதாக அரைத்து எடுக்கவும்.
தக்காளியை நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
பிறகு தக்காளி பச்சைமிளகாய் இவைகளையும் அறக்கவும்.
தண்ணீர்விடாமல் அரைக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பூண்டு மசால்வை வதக்கவும்.
பிறகு தக்காளி கலவையை போட்டு வதக்கவும்.
1 நிமிடம் கழித்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
உப்பு மிளகாய் பொடி போடவும்.
நன்கு கொதித்து வாசனை போனதும் ஒரு 10 நிமிஷம் ஆகும், இறக்கவும்.
வேண்டுமானால் கொத்துமல்லி போடலாம்.
தயாராய் பொரித்து வைத்துள்ள பிரெட் ரோல்ஸ் ஐ போட்டு மேலே கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.

குறிப்பு: இரண்டையும் தனித்தனி யாக வைத்திருந்து ,பரிமாறும் போது பிரெட் ரோல்ஸ் மேல் கிரவி யை விட்டு தரணும். இல்லையானால் பிரட் ரோல்ஸ் ஊறி நன்றாக இருக்காது. சரியா?

No comments:

Blog Archive