Friday, October 9, 2020

வெந்தயக் கீரை சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
  • வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
  • வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
  • பச்சை மிளகாய் 8 - 10
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.


Method:
  • வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
  • தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
  • இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
  • சுவையான மேத்தி சப்பாத்தி தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.


Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

No comments:

Blog Archive