Tuesday, October 6, 2020

மசாலா தோசை 2

Ingredients:
  • மசாலா பொடி செய்யத் தேவையானவை:
  • குண்டு மிளகாய் 10 -12
  • அன்னாசிப்பூ 4 -5
  • தனியா 2 - 3 டேபிள் ஸ்பூன்
  • மிளகு 1 டேபிள் ஸ்பூன்
  • பட்டை 2 -3
  • சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் 4 -5
  • கிராம்பு 4 -5
  • மசாலா செய்ய :
  • வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
  • சின்ன வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
  • பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
  • இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
  • தோசை மாவு 2 கப்
  • தோசை செய்ய தேவையான நெய் + எண்ணெய்
  • தாளிக்க : கடுகு மற்றும் சீரகம்


Method:
  • துருவின தேங்காயை வறட்டு வாணலி இல் வறுக்கவும்.
  • ஒரு துளி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த மசாலா சாமான்களை வறுத்து பொடிக்கவும்.
  • ஒரு ஆழமான வாணலி இல் நெய் மட்டும் எண்ணெய் விட்டு, தாளிக்கவும்.
  • பிறகு அதில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
  • உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பொடி போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறவும்.
  • அதில் மசாலா பொடியை தேவையான அளவு போடவும்.
  • நன்கு கலக்கவும்.
  • உப்பு போட்டு மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
  • தோசைக்கல்லை அடுப்பில போட்டு, மெல்லிய தோசை வார்க்கவும்.
  • நெய்விட்டு திருப்பவும், பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலா 2 -3 ஸ்பூன்கள் தேவைக்கு ஏற்ப வைத்து மூடி பரிமாறவும்.
  • இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள புதினா அல்லது கொத்துமல்லி அல்லது தேங்காய் சட்னி என எதுவேண்டுமானாலும் நல்லா இருக்கும்.


Notes:
  • செய்து வைத்த மசாலா பொடி மீந்து போனால் வதக்கல் கறியமுதுகள் செய்யும்போது உபயோகப்படுத்தலாம்

No comments:

Blog Archive