Tuesday, October 6, 2020

பூந்தி லட்டு

Ingredients:
  • 1cup கடலை மாவு
  • 1sp அரிசி மாவு
  • 1tabsp முந்தரி பருப்பு
  • 1tabsp உலர்ந்த திராக்ஷை
  • 10 - 15 கிராம்பு
  • 2sp நெய்
  • ஆரஞ்சு கலர் 2 சிட்டிகை
  • அரை ஸ்பூன் ஏலப்பொடி
  • உப்பு ஒரு சிட்டிகை
  • 'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
  • பொரிக்க நெய்/எண்ணெய்
  • சர்க்கரை பாகுகாக :
  • 1 3 /4cup சர்க்கரை
  • 3 /4cup தண்ணீர்


Method:
  • கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஒரு சிட்டிகை,ஆரஞ்சு கலர், சோடா உப்பு ஒரு சிட்டிகை எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
  • தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
  • பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
  • பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
  • பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
  • இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
  • ஒரு பெரியபேசினில் மொத்த பூந்திகளையும் போடவும்.
  • நெய் விட்டு உலர்ந்த திராக்ஷை, கிராம்பு , முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
  • மற்றும் ஒரு அடுப்பில் சர்க்கரை பாகுகாக ஆழமான பத்திரத்தில் சர்க்கரை + தண்ணீர் விடவும். ஏலப்பொடி போடவும்.
  • கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
  • சர்க்கரை பாகை பூந்தி மேல் கொட்டவும்.
  • கரண்டியால் கிளறி விடவும்.
  • கொஞ்சம் சூடு ஆறினதும் லட்டு பிடிக்கவும்.

No comments:

Blog Archive