Tuesday, October 6, 2020

ரவா லட்டு - கர்நாடகா பாணியில்

Ingredients:
  • 2cup 'பாம்பே' ரவா
  • 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
  • 2cup துருவிய கொப்பரை
  • 1 /2cup நெய்
  • 2 tabsp உடைத்த முந்திரி
  • 1tabsp உலர்ந்த திராக்ஷை
  • ஏலப்பொடி
  • 1 /2cup பால்
  • குந்குமப்பூ கொஞ்சம்


Method:
  • ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
  • அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
  • மொத நெய் யையும் விட்டு, ரவையை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
  • நல்ல வாசனை வந்ததும், அடுப்பை அணைக்கவும்.
  • ரவையுடன் சர்க்கரை கொப்பரை சேர்த்து, கை விடாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
  • ஏலப்பொடி போடவும்.
  • வறுத்த முந்திரி, திராக்ஷையை போடவும்.
  • எல்லாவற்றையும் ஒரு பேசினில் போடவும்.
  • நடுவில் குழித்து பாலை சுட பண்ணி ஊற்றவும்.
  • நன்கு கலந்து சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.
  • ஆறினால் உருட்ட கஷ்டம் .


Notes:
  • இதில் பால் சேர்ப்பதனால் 2 - 3 நாளுக்குமேல் வைத்துக்கொள்ள முடியாது.

No comments:

Blog Archive