Tuesday, October 6, 2020

முந்தரி ஹல்வா

Ingredients:
  • 1cup முந்தரி விழுது (150gm முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
  • 2cup சர்க்கரை
  • 2 1 /2cup சக்கரை இல்லாத கோவா
  • 2sp நெய்
  • 2sp முந்திரி உடைத்து
  • சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
  • பால் சிறிதளவு


Method:
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்தரி விழுது, நெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • இப்பொழுது கோவாவை துருவி அல்லது உதிருதுப்போடவும்.
  • நன்கு கிளறவும், கொஞ்சம் கெட்டியாகும்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
  • சர்க்கரை சேர்க்கவும்.
  • கைவிடாமல் கிளறவும்.
  • நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி, உடைத்துவைதுள்ள முந்தரி தூவி, கிளறி இறக்கவும்.
  • சுவையான முந்தரி ஹல்வா தயார்.


Notes:
  • வெறும் முந்தரி விழுது போடும் இந்த ஹல்வா செய்யலாம. (பாதாம்
  • ஹல்வா) போலவே.
  • சர்க்கரை இல்லாத கோவா கடையில் வாங்கினாலும் ஓகே அல்லது, ஒரு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சியும் நாமே தயாரிக்கலாம்.

No comments:

Blog Archive