Tuesday, October 6, 2020

ரிப்பன் பகோடா - 3

Ingredients:
  • 1 கப் அரிசி மாவு
  • 4 கப் கடலை மாவு
  • 1 / 2 கப் தேங்காய் பால்
  • 10 - 12 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் துருவின இஞ்சி
  • உப்பு
  • பெருங்காயம் கால் ஸ்பூன்
  • சோடா உப்பு ஒரு சிட்டிகை
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • பச்சை மிளகாய் + இஞ்சியை அரைக்கவும்.
  • அரிசி மாவு , கடலை மாவு, பெருங்காயம் மற்றும் அரைத்த பச்சை மிளகாய் , இஞ்சி, சோடா உப்பு எல்லாம் ஒன்றாக போட்டு நன்கு கலக்கவும்.
  • உப்பு மற்றும் தேங்காய் பால் விட்டு மாவு பிசையவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
  • முறுக்கு அச்சில் 'ரிப்பன் பகோடா' தட்டு போட்டு மாவை ரொப்பி சூடான எண்ணெய் இல் பிழியவும் .
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
  • கலப்பு மாவில் செய்வதை விட அரைத்து செய்யும் இது ரொம்ப ருசியாக இருக்கும்.

No comments:

Blog Archive