Tuesday, October 6, 2020

வெங்காய தோசை

Ingredients:
  • தோசை மாவு 1 கப்
  • வெங்காயம் 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )
  • பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் ) தேவையானால் சேர்க்கவும்.
  • தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.


Method:
  • அடுப்பில் தோசைகல்லை போட்டு 'சுமாராக கனமாக ' தோசை வார்க்கவும்.
  • கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு அது முழுவதுமாக வேகும் முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும். ( நிறையா )
  • அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
  • பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
  • மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
  • வெங்காயங்கள் நன்கு பொரிந்து கொள்ளும்.
  • மணமான 'வெங்காய தோசை' ரெடி.
  • கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
  • தொட்டுக்க எதுவுமே வேண்டாம், தேவை என்றால் தைறு போறும்.
  • வெங்காயம் நிறைய இருப்பதால் உடலுக்கு குளுமை

No comments:

Blog Archive