Tuesday, October 6, 2020

வால்நட் ஹல்வா

Ingredients:
  • 2 கப் மைதா அல்லது all purpose flour
  • 3 கப் சர்க்கரை
  • 1 கப் வெண்ணை
  • 1 கப் வால்நட் ( பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
  • 3 கப் வெந்நீர்


Method:
  • ஒரு அடிகனமான வாணலி அல்லது உருளி இல் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போடவும்.
  • அதிலேயே சர்க்கரையும் போடவும்.
  • மிதமான தீ இல் அடுப்பை வைக்கவும்.
  • வெண்ணை உருகி சர்க்கரையும் உருகட்டும்.
  • அது உருகி கொஞ்சம் பிரவுன் கலரில் குழம்பாக வரும் இதை 'காரமெல்' என்போம்.
  • அப்படி வந்ததும், அதை கிளரிக்கொண்டே, வெந்நீரை அதில் விடவும்.
  • நன்கு கலக்கவும்.
  • அதில் மொத்த 'caramel ' ம் கரைந்து பிரவுன் கலர் தண்ணீர் கிடைக்கும்.
  • அதை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
  • மற்றுமொரு வாணலி இல் பாக்கி வெண்ணை போட்டு அது கொஞ்சம் உருகியதுமே , மைதாவை போட்டு நன்கு பொரிக்கவும்.
  • கருகாமல் பார்த்துக்கொள்ளனும்.புன்னகை
  • நல்ல 'பவுன் கலரில் பொரிந்ததும், பொடித்து வைத்துள்ள வாழ்நாட்களை போட்டு கிளறவும்.
  • அவை நன்கு கலந்ததும், இப்போ எடுத்து வைத்துள்ள 'caramel water ' ஐ அதில் விட்டு, கிளறவும்.
  • கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
  • மொத்த தண்ணீரும் உ றிந்து கொண்டு 'ஹல்வா' பதத்துக்கு வரும்வரை கிளறவும்.
  • நெய்தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
  • தேவையானால் , கொஞ்சம் ஆறினதும், கடைகள் போல வில்லைகள் போடவும்.
  • அருமையான ' வால்நட் ஹல்வா ' தயார்.

No comments:

Blog Archive