Tuesday, October 6, 2020

ஓட்ஸ் ரவா தோசை

Ingredients:
  • ஓட்ஸ் - 1/2 க‌ப்
  • கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • ர‌வை - 1 கப்
  • எண்ணெய் + நெய் தோசை வார்க்க
  • வெங்காய‌ம் - ஒன்று
  • ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
  • கறிவேப்பிலை கொஞ்சம் - உப்பு கொஞ்சம்


Method:
  • முதலில் ஓட்ஸ்ஐ நன்கு வறுக்கவும்.
  • மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
  • பிறகு அத்துடன் கோதுமைமாவு, ர‌வையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) க‌ரைத்து கொள்ள‌வும்.
  • பொடியாக நறுக்கின வெங்காய‌ம்,ப‌ச்சை மிள‌காய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
  • அது ஒரு 10 - 15 நிமிட‌ம் ஊறட்டும்.
  • நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
  • நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
  • இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி


Notes:
  • கொத்துமல்லி இஞ்சி போடலாம்; மிளகு சீரகம் போடலாம்.

No comments:

Blog Archive