Thursday, October 8, 2020

மோதிசூர் லட்டு

Ingredients:
  • கடலை மாவு - 1 கப்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - 1 கப்
  • ஏலக்காய் - 1/2 டீ ஸ்பூன்
  • பாதாம் - 10
  • முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
  • உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • ஒரு கப் கடலை மாவிற்கு, ஒரு கப் தண்ணிர் சேர்த்து, கட்டி சேராமல் பிசைந்து கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். வாணலியை சூடாக்கி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, புகை வரும் அளவிற்கு சூடானதும், மெல்லிய துளைகள் உள்ள சல்லடைக் கரண்டியை எண்ணெய் மேல் பிடித்து, கடலை மாவை ஊற்றவும். மாவு எண்ணெயில் விழுந்த இரண்டு நிமிடங்களில், எடுத்து விட வேண்டும். அதிக நேரம் வைக்க வேண்டாம். இப்படியே, மொத்த மாவையும், பூந்தியாக பொரித்து எடுக்கவும்.
  • பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரைக்கு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை, காய்ச்சவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இதில், பூந்தியைப் போட்டு, சர்க்கரை பாகும், பூந்தியும் கெட்டியாகும் வரை பக்குவமாக கிளறவும். இதில், நெய், ஏலக்காய் பொடி போட்டு, அடுப்பை அணைத்து, ஆற விடவும்.
  • ஆறியதும், நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, நீரில் ஊற வைத்து உரித்த பாதாம் சேர்த்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

No comments:

Blog Archive