Wednesday, October 7, 2020

எலுமிச்சங்காய் ஊறுகாய் 2

Ingredients:
  • எலுமிச்சம் பழம் - 1 கிலோ
  • உப்பு - 100 - 150 கிராம்
  • மிளகாய்ப் பொடி - 200 கிராம்
  • வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
  • பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - கால் கிலோ ,
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்


Method:
  • எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
  • அதன் மேல் உப்பைத் தூவவும்.
  • பிறகு மிளகாய் பொடி தூவவும்.
  • அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
  • நன்கு குலுக்கவும்
  • ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
  • அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
  • ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
  • ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
  • இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
  • சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

No comments:

Blog Archive