Wednesday, October 7, 2020

உப்பு கொழுக்கட்டைகள்

Ingredients:
  • பச்சரிசி மாவு 1 கப்
  • காராமணி 1/4 கப்
  • தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது - அரை கப் ( துருவியும் போடலாம் )
  • பச்சை மிளகாய் 4 - 6 - பொடியாக நறுக்கவும்
  • பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
  • உப்பு
  • தாளிக்க எண்ணெய்
  • கடுகு உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • தண்ணீர் 2 கப்


Method:
  • காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது உருளி இல் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
  • பிறகு, இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்க்கவும்.
  • அடுப்பை சின்னதாக்கிவிட்டு, மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
  • அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
  • மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
  • நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
  • ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
  • இது போல மொத்த மாவையும் செய்யவும்.
  • இவைகளை, அதாவது இந்த அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
  • பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.
  • மிகவும் வாசனையாக ருசியாக இருக்கும்.

Images:


No comments:

Blog Archive