Wednesday, October 7, 2020

மா லட்டு

Ingredients:
  • 2cup பயத்தம் பருப்பு
  • 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
  • 2 1 /2cup நெய்
  • 2 tabsp உடைத்த முந்திரி
  • ஏலப்பொடி


Method:
  • பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
  • மிக்ஸ்யில் பொடிக்கவும்.
  • ஒரு சல்லடை இல் போட்டு சலிக்கவும்.
  • மீண்டும் அரைக்கவும்.
  • ஒரு பேசினில் போடவும்.
  • பொடித்த சர்க்கரையும் போடவும்.
  • ஏலப்பொடி போடவும்.
  • ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
  • நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.
  • That is all. 'மா லாடு' ரெடி.


Notes:
  • நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த பயத்தம் பருப்பு , சர்க்கரை , ஏலம் எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.
  • நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'மா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.
  • இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான பயத்தம் கஞ்சி / பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்.

No comments:

Blog Archive